டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

கள நிலவரத்துக்கு எதிரானது ஹரியாணா தேர்தல் முடிவுகள்: காங்கிரஸ்

ஹரியாணா தேர்தல் முடிவுகள் கள நிலவரத்துக்கு எதிரானது என காங்., எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு.

News image
Updated On :8 அக்டோபர் 2024, 5:25 pm IST

ஹரியாணா தேர்தல் முடிவுகள் கள நிலவரத்துக்கு எதிரானதாக உள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலாளாரும் எம்.பி.யுமான ஜெய்ராம் ரமேஷ் இன்று (அக். 8) தெரிவித்தார்.

ஹரியாணாவில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மை பெற்று 3வது முறையாக ஆட்சி அமைக்கவுள்ள நிலையில், அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜம்மு - காஷ்மீரில் காங்கிரஸ் - தேசிய மாநாட்டுக் கட்சி சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்கும்.

ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீண்டும் கொண்டுவருவதே எங்கள் கூட்டணி ஆட்சியின் முதன்மை நோக்கம்.

ஜம்மு - காஷ்மீரில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெறக்கூடாது என பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஹரியாணாவில் தேர்தல் முடிவுகள் கள நிலவரத்துக்கு மாறானதாக உள்ளது. ஹரியாணா மாநில மக்களின் விருப்பதுக்கு எதிராக உள்ளது. மாநில மேம்பாட்டிற்காக மக்கள் என்ன நினைத்தார்களோ அதற்கு எதிராக உள்ளது. இந்தத் தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஹரியாணாவில் 3 மாவட்டங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து புகார்கள் வந்துள்ளன. வேட்பாளர்களின் புகார் மனுக்களை நாளை அல்லது நாளைமறுநாள் தேர்தல் ஆணையத்தில் அளிப்போம்.

மிகமுக்கியமான கேள்விகளை எங்கள் கட்சி வேட்பாளர்கள் முன்வைத்துள்ளனர். சதித்திட்டம் தீட்டி பாஜகவினர் வெற்றி பெற்றுள்ளதை ஆதாரத்துடன் ஆணையத்திடம் தெரிவிப்போம். வெளிப்படையான ஜனநாயக நடைமுறைக்கு ஏற்பட்ட மிகப்பெரிய தோல்வி என ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பவன் கேரா பேசியதாவது,

’’10 ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு - காஷ்மீரில் தேர்தல் நடைபெற்றுள்ளது. இது வரலாற்று சிறப்பு மிக்கத் தேர்தல். ஜம்மு - காஷ்மீர் மக்கள் தெளிவான முடிவை வழங்கியுள்ளனர். இன்றும் நாம் ஜம்மு - காஷ்மீரை ஒரு மாநிலமாகவே கருதுகிறோம். ஜம்மு - காஷ்மீர் மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஜம்மு - காஷ்மீரின் கண்ணியத்துக்காக எதையும் செய்யாத கட்சிக்கு எதிராக மக்கள் உற்சாகமாகத் தேர்தலில் வாக்களித்துள்ளனர். சிறப்பு அந்தஸ்தை நீக்கி மாநிலமாகக் கருதாமல், யூனியன் பிரதேசமாக மாற்றியது எதிர்பாராதது’’ எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.