ஹரியாணா தேர்தல் முடிவுகளில் தாமதம் ஏன்? தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்

ஹரியாணா தேர்தல் முடிவுகளில் தாமதம் ஏன் என்று கேட்டு தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.
கார்கே -  ராகுல்
கார்கே - ராகுல்Center-Center-Delhi
Published on
Updated on
1 min read

ஹரியாணா பேரவைக்கு நடந்து முடிந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வரும்நிலையில் காலை 9 மணி முதல் 11 மணி வரை தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் விவரிக்க முடியாத ஒரு தாமதம் ஏற்பட்டிருப்பது ஏன் என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியிருக்கிறது.

வாக்குப்பதிவு தொடங்கியதும் காங்கிரஸ் முன்னிலையில் இருந்தது. பிறகு, பின்தங்கத் தொடங்கி, ஆளும் பாஜக அரசு முன்னிலைக்கு வந்தது. தற்போது பாஜக தொடர்ந்து முன்னிலையில் இருப்பதாகக் கூறப்பட்டாலும், வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் உடனுக்குடன் பதிவு செய்யப்படவில்லை என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியிருக்கிறது. அதற்கேற்றார் போல, 11 மணி முதல் பின்னடைவில் இருந்ததாகக் கூறி வந்த காங்கிரஸ் வேட்பாளர் வினேஷ் போகத் தற்போது வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் ஆணையத்திடம், காங்கிரஸ் இது தொடர்பாக முறைப்படி புகார் அளித்திருக்கிறது.

இதுபற்றி நினைத்துப் பார்த்தால், தவறான நம்பிக்கையை மக்கள் மனதில் ஏற்படுத்தும் வகையில் இந்த செயல்பாடு உள்ளது. ஏற்கனவே சமூக ஊடகங்களில் இதுபோன்ற தகவல்கள் பரவி வருவதையும் நீங்கள் பார்க்கலாம். பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் இன்னும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி அதனை ஆளுங்கட்சி பயன்படுத்திக்கொள்ளலாம் என்று மறைமுகமாகக் காங்கிரஸ் குற்றம்சாட்டியிருக்கிறது.

எனவே, தேர்தல் நிலவரங்களை உடனுக்குடன் மிகச் சரியாகவும் துல்லியமாகவும் இணையதளங்களில் பதிவு செய்யுமாறு உடனடியாக உங்கள் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், இதனால், தவறான செய்திகள் பரப்பப்படுவதும் தவிர்க்கப்படும் என்றும் கேட்டுக்கொள்ளப்படுவதாகக் புகார் கடிதத்தில் காங்கிரஸ் தரப்பு கூறியிருக்கிறது.

இந்த புகார் கடிதம் கொடுக்கப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், "... எங்கள் கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்கும் என்று நம்புகிறோம். 10-11 சுற்றுகளின் முடிவுகள் வெளியாகியுள்ளன. ஆனால் தளத்தில் நான்கு முதல் ஐந்து சுற்றுகள் மட்டுமே புதுப்பிக்கப்படுகின்றன." "உடனுக்குடன் பதிவுகள் இல்லாமல் இருப்பது, தேர்தல் முடிவின் தவறான போக்குகளை வைத்து அதனை சமூக தளத்தில் பகிர்ந்துகொண்டு, மன உறுதியைக் குலைக்கும் வகையில் முயற்சிகள் நடப்பதாகவும்" குற்றம்சாட்டியிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com