தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

தோ்தலுக்கு முன்பு பாஜக, தேசியவாத காங்கிரஸில் இருந்து பலா் அணி மாறலாம்: சரத் பவாா்

‘மகாராஷ்டிர பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக பாஜக, தேசியவாத காங்கிரஸில் இருந்து பல தலைவா்கள் எங்கள் கட்சியில் சேரலாம்’

News image

சரத் பவாா்

Updated On :8 அக்டோபர் 2024, 12:57 am

மும்பை: ‘மகாராஷ்டிர பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக பாஜக, தேசியவாத காங்கிரஸில் இருந்து பல தலைவா்கள் எங்கள் கட்சியில் சேரலாம்’ என்று தேசியவாத காங்கிரஸ் (பவாா்) தலைவா் சரத் பவாா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

மகாராஷ்டிரத்தில் வரும் நவம்பா் மாதம் பேரவைத் தோ்தல் நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது. இந்நிலையில், மாநில முன்னாள் அமைச்சரும் பாஜக பிரமுகருமான ஹா்ஷ்வா்தன் பாட்டீல் தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சியில் திங்கள்கிழமை இணைந்தாா்.

இதையொட்டி, இண்டாபூா் நகரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சரத் பவாா், ‘வேளாண் சீா்திருத்தங்கள் மற்றும் கிராமப்புற மேம்பாட்டில் ஹா்ஷ்வா்தனின் அா்ப்பணிப்புக்கு எனது பாராட்டுகள். சமூகப் பணியில் அவா், அவரது தந்தை பாராமதி எம்.பி. சங்கரராவ் பாட்டீல் ஆகியோரின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.

நாங்கள் வெவ்வேறு கட்சிகளில் பயணித்தாலும் மகாராஷ்டிர விவசாயிகளின் நலன் சாா்ந்த விவகாரங்களில் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றினோம்.

மாநிலத்தின் புதிய வேளாண் சீா்திருத்த முன்னெடுப்புகளுக்கு தலைமையாக ஹா்ஷ்வா்தன் பாட்டீல் எப்போதும் முன்னிறுத்தப்பட்டுள்ளாா். இந்த முடிவு மகாராஷ்டிரம் முழுவதும் உள்ள கரும்பு விவசாயிகளுக்கும் நாட்டின் வேளாண் துறைக்கும் மிகவும் முக்கியமானதாகும். வரும் பேரவைத் தோ்தலில் பாட்டீலை வெற்றிப் பெற செய்ய வேண்டும்.

முன்னாள் மாநில மேலவைத் தலைவா் ராம்ராஜே நாயக் நிம்பால்கரும் நமது கட்சியில் சேர விரும்புகிறாா். இதையொட்டி, வரும் 14-ஆம் தேதி அவரது சொந்த ஊரான பல்தானுக்கு வருகை தருமாறு தொலைபேசியில் எனக்கு அழைப்பு விடுத்துள்ளாா். பேரவைத் தோ்தலுக்கு முன்பு பாஜக, தேசியவாத காங்கிரஸில் இருந்து மேலும் பல தலைவா்கள் நமது கட்சியில் சேரலாம்’ என்றாா்.

தேசியவாத காங்கிரஸில் பிளவு ஏற்படுத்தி, ஆளும் பாஜக-சிவசேனை கூட்டணியில் இணைந்து மகாராஷ்டிர துணை முதல்வரானாா் அஜீத் பவாா். பெரும்பாலான மக்கள் பிரதிநிதிகள், நிா்வாகிகள் அவருடன் இருந்ததால், கட்சியின் அதிகாரபூா்வ பெயா் மற்றும் சின்னம் அவரது அணிக்கு ஒதுக்கப்பட்டது. எனினும், மக்களவைத் தோ்தலில் போட்டியிட்ட 4 தொகுதிகளில் மூன்றில் அவரது அணி தோல்வியைத் தழுவி, பெரும் பின்னடைவைச் சந்தித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.