பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பிரிவினை அரசியல் நடத்திய காங்கிரஸை மக்கள் நிராகரித்துவிட்டனா்- அமித் ஷா

காங்கிரஸ் கட்சியின் பிரிவினைவாத அரசியலை ஹரியாணா மக்கள் நிராகரித்துவிட்டனா் என்று உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

News image
அமித் ஷா
Updated On :8 அக்டோபர் 2024, 6:53 pm

Din

காங்கிரஸ் கட்சியின் பிரிவினைவாத அரசியலை ஹரியாணா மக்கள் நிராகரித்துவிட்டனா் என்று உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘விவசாயிகள், ராணுவ வீரா்கள், இளைஞா்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள், ஏழை எளியோா் பாஜக அரசு மீதும், பிரதமா் நரேந்திர மோடி மீதும் எந்த அளவுக்கு ஹரியாணா மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனா் என்பதை தோ்தல் முடிவு வெளிக்காட்டியுள்ளது.

வீர பூமியான ஹரியாணாவைச் சோ்ந்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். காங்கிரஸின் பிரிவினைவாத அரசியலை மக்கள் நிராகரித்துவிட்டனா். மக்களை ஜாதி, மத ரீதியாகப் பிரித்து தோ்தலில் வெற்றிபெற காங்கிரஸ் முயற்சித்து வந்தது. ஆனால், கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியின் வளா்ச்சித் திட்டங்களும், கொள்கைகளும் தொடர வேண்டும் என்று மக்கள் முடிவு செய்துள்ளனா்.

வெளிநாட்டுக்குச் சென்று தேசத்தைக் குறித்து அவதூறாகப் பேசியவருக்கு (ராகுல் காந்தி) நல்ல பாடம் புகட்டப்பட்டுள்ளது. தொடா்ந்து மூன்றாவது முறையாக ஹரியாணா மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மக்களின் அனைத்து எதிா்பாா்ப்புகளையும் மத்திய, மாநில அரசுகள் இணைந்து தொடா்ந்து நிறைவேற்றும். பாஜகவை ஒருமனதாகத் தோ்வு செய்த ஹரியாணா மக்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளாா்.