ஜோ ரூட், ஹாரி புரூக் சதம்: 492 ரன்கள் குவித்தது இங்கிலாந்து!
ஜோ ரூட், புரூக் சதத்தால் இங்கிலாந்து அணி 492 ரன்கள் குவித்தது.


பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட், புரூக் சதத்தால் இங்கிலாந்து அணி 492 ரன்கள் குவித்தது.
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி முல்தானில் நடைபெற்றுவருகிறது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 556 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
அடுத்து தனது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து, செவ்வாய்க்கிழமை முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் சோ்த்திருந்தது. ஜாக் கிராலி 64, ஜோ ரூட் 32 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்க, கேப்டன் ஆலி போப் டக் அவுட் ஆனாா்.
அடுத்து மூன்றாவது நாளைத் தொடங்கிய இங்கிலாந்து அணியின் வீரர்கள் நிதானமாக ரன்களை குவித்தனர். ஜாக் கிராலி 72 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினார். டெஸ்ட் போட்டியில் டி20 போல அதிரடி காட்டிய பென் டக்கெட் 75 பந்துகளில் 11 பவுண்டரியுடன் 84 ரன்கள் அடித்து வெளியேறினார்.
அடுத்து வந்த ஹாரி புரூக், ஜோ ரூட்டுடன் இணைந்து கணிசமான பங்களிப்பை அளித்தார். இருவரும் நிதானமாக ஆடி சதம் அடித்தனர்.
இருவரும் சேர்ந்து 4-வது விக்கெட்டுக்கு 243 ரன்கள் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி வீரர்களால் இருவரது விக்கெட்டையும் வீழ்த்த முடியமால் திணறினர்.
3-வது நாள் ஆட்ட நேரம் முடிவில் இங்கிலாந்து அணி 101 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 492 ரன்கள் குவித்துள்ளது. ஜோ ரூட் 176* ரன்களுடனும், ஹாரி புரூக் 141* ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
பாகிஸ்தான் அணி தரப்பில் ஷாகீன் ஷா, அமிர் ஜமால், நஷீர் ஷா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...