படமாகிறது ரத்தன் டாடாவின் வாழ்க்கை!
ரத்தன் டாடாவின் வாழ்க்கை திரைப்படத்தை ஜீ ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்க முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ரத்தன் டாடாவின் வாழ்க்கை திரைப்படத்தை ஜீ ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்க முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜீ என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம் தொழிலதிபர் ரத்தன் டாடாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததுள்ளது. இதுகுறித்து அதன் நிர்வாக செயல் இயக்குநர் புனித் கோயங்கா, ரத்தன் டாடா உலக அளவில் அவர் ஏற்படுத்திய தாக்கத்தை, வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க முன்வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தொழிலதிபர் ரத்தன் டாடா (86) முதுமை தொடர்பான பல்வேறு பாதிப்புகள் காரணமாக மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் கடந்த திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்ட நிலையில் புதன்கிழமை இரவு காலமானார்.
ரத்தன் டாடா இறப்பு குறித்து புனித் கோயங்கா தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “ஒரு சகாப்தத்தின் முடிவு! அவர் தனது தொலைநோக்குப் பார்வையால் இந்தியாவை வணிக ரீதியாக முன்னேற்றியது மட்டுமல்லாமல், சமூகத்தின் முன்னேற்றத்திற்கான முயற்சிகளிலும் சிறந்த முன்மாதிரியாக இருந்தார். நாடு முழுவதும் நம் அனைவருக்கும் ஏற்பட்ட இழப்பு ஈடுசெய்ய முடியாதது” எனப் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...