6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மகா நவமி: தலேஜு பவானி கோயிலில் திரண்ட பக்தர்கள்!

குமாரி பூஜை மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது இக்கோயிலில்.

News image
தலேஜு பவானி கோயில்
Updated On :11 அக்டோபர் 2024, 10:42 am

பிடிஐ

நேபாளத்தில் பிரசித்தி பெற்ற தலேஜு பவானி கோயில் மகா நவமியையொட்டி ஏராளமான பக்தர்கள் கோயிலில் திரண்டு வழிபாடு மேற்கொண்டனர்.

தலேஜு பவானி கோயிலில் சிறுமிகளைத் தேவியின் அவதாரமாகக் கருதி போற்றி வழிபடுகின்றனர். நேபாளத்தின் காத்மாண்டுவில் அமைந்துள்ளது இத்திருக்கோயில். இந்தக் கோயிலில் வருடத்துக்கு ஒருமுறை இந்திர யாத்திரை வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

இந்த நிலையில், நவராத்திரியின் ஒன்பதாம் நாளான இன்று மகா நவமி தினத்தன்று தலேஜு பவானியின் சிலையை கோயில் கருவறைக்குள் எடுத்துச் செல்லப்படுகிறது. நேவாரி மக்களின் முக்கிய தெய்வமாகக் கருதப்படும் தலேஜு பவானியை இன்று காலை முதல் ஏராளமான பக்தர்கள் கோயிலில் திரண்டு வருடத்திற்கு ஒருமுறை சடங்குகளும், பூஜைகளும் செய்து வழிபடுகின்றனர்.

குமாரி பூஜை மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது இக்கோயிலில். அங்குள்ள அம்மன் குமாரி வடிவில் பூமிக்கு வந்ததாகக் கருதப்படுகிறது.ண

நேபாள நாட்டிலுள்ள சக்தி பீடங்களில் ஒன்றாக தலேஜு பவானி கோயில் கருதப்படுகிறது. இக்கோயிலில் குறிப்பாக சிறுமிகள் அதிகம் வழிபடுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.