
பஞ்சாப் பகுதியில் பறந்த பாகிஸ்தான் ஆளில்லா விமானத்தை(ட்ரோன்) பாதுகாப்புப் படையினர் சுட்டுவீழ்த்தினர்.
இந்திய - பாகிஸ்தான் எல்லையான பஞ்சாப் பகுதிகளில் அவ்வப்போது பாகிஸ்தானுக்குச் சொந்தமான ஆளில்லா விமானம் வருவதும் எல்லை பாதுகாப்புப் படையினர் அதனை சுட்டுவீழ்த்துவதும் அடிக்கடி நடந்து வருகிறது.
இதையும் படிக்க | 10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எப்போது?
இந்நிலையில் நேற்று(வெள்ளிக்கிழமை) சர்வதேச எல்லையில் பஞ்சாபின் ஃபெரோஸ்பூர் பகுதியில் பாகிஸ்தானில் இருந்து வந்த ஆளில்லா விமானம் பறந்தது. அப்போது ரோந்து பணியில் இருந்த பாதுகாப்புப் படையினர் அதனை சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
அதில் 500 கிராம் ஹெராயின், துப்பாக்கி மற்றும் ஒரு நாளிதழ் இருந்ததாக அதிகாரிகள் இன்று தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.