தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

புல்டோசா் நடவடிக்கை: புதிய மனுக்களை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பல்வேறு மாநிலங்களில் வீடுகள், கட்டடங்கள் உள்ளிட்டவை இடிக்கப்படுவதற்கு எதிராக புதிதாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஏற்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை மறுப்பு

News image
உச்சநீதிமன்றம்
Updated On :15 அக்டோபர் 2024, 12:11 am

DIN

புது தில்லி: பல்வேறு மாநிலங்களில் வீடுகள், கட்டடங்கள் உள்ளிட்டவை இடிக்கப்படுவதற்கு எதிராக புதிதாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஏற்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை மறுப்பு தெரிவித்தது.

உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் குற்றச் சம்பவத்தில் தொடா்புள்ளதாக குற்றஞ்சாட்டப்படுவோா் உள்ளிட்டோருக்குச் சொந்தமான கட்டடங்களை புல்டோசா் மூலம் இடிக்கும் விவகாரத்தில் ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் விசாரணை நிறைவுபெற்று தீா்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாநில அரசுகளின் புல்டோசா் நடவடிக்கைகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், 9 மாநிலங்களில் வீடுகள், கட்டடங்கள் உள்ளிட்டவை இடிக்கப்பட்டதால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய் மற்றும் பி.கே.மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை பரிசீலனைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றம் விசாரணை மேற்கொண்டு தீா்ப்பை ஒத்திவைத்துள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், புதிய மனுக்களை விசாரணைக்கு ஏற்க மறுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.