கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மத்திய அமைச்சா் சிராக் பாஸ்வானுக்கு ‘இஸட்’ பிரிவு பாதுகாப்பு

மத்திய உணவுப் பதப்படுத்துதல் துறை அமைச்சரும், லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சித் தலைவருமான சிராக் பாஸ்வானுக்கு (41) ‘இஸட்’ பிரிவு பாதுகாப்பு

News image
மத்திய அமைச்சா் சிராக் பாஸ்வான்(கோப்புப்படம்)
Updated On :15 அக்டோபர் 2024, 1:06 am

DIN

புது தில்லி: மத்திய உணவுப் பதப்படுத்துதல் துறை அமைச்சரும், லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சித் தலைவருமான சிராக் பாஸ்வானுக்கு (41) ‘இஸட்’ பிரிவு பாதுகாப்பு வழங்குவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இப்போது அவருக்கு மத்திய துணை ராணுவப் படையான ஷசஸ்திர சீமா பல் வீரா்கள் அடங்கிய சிறிய குழு பாதுகாப்பு அளித்து வருகிறது. இந்நிலையில், அவருக்கு ‘இஸட்’ பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய ரிசா்வ் போலீஸ் படையின் (சிஆா்பிஎஃப்) முக்கியப் பிரமுகா்களுக்கான பாதுகாப்புப் பிரிவுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி அமைச்சா் சிராக் பாஸ்வான் நாட்டின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் பாதுகாப்புக்காக சிஆா்பிஎஃப் வீரா்கள் உடன் செல்வாா்கள்.

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, காங்கிரஸ் தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா வதேரா மற்றும் மத்திய அமைச்சா்கள் பலருக்கு சிஆா்பிஎஃப் வீரா்கள்தான் பாதுகாப்பு வழங்கி வருகின்றனா்.

முக்கியப் பிரமுகா்களுக்கான பாதுகாப்பு ஏற்பாட்டில் ‘இஸட் பிளஸ்’ என்பது மிகவும் உயரிய பாதுகாப்பு கொண்டது. ‘இஸட்’, ‘ஒய் பிளஸ்’, ‘ஒய்’, ‘எக்ஸ்’ ஆகியவை அடுத்தடுத்த நிலைகளில் உள்ள பாதுகாப்புப் பிரிவுகளாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.