பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்.. இன்று மட்டும் 15 விமானங்கள்!

விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது தொடர்கதையாகும் நிலையில், இன்று மட்டும் 15 விமானங்கள் தரையிறக்கப்பட்டன.

News image
வெடிகுண்டு மிரட்டல்
Updated On :19 அக்டோபர் 2024, 9:48 am

DIN

விமானப் பயணங்கள் மற்றும் விமான பயணிகளை அதிகம் அவதிக்குள்ளாக்கியிருக்கும் வெடிகுண்டு மிரட்டல் தொடர்கதையாகும் நிலையில் சனிக்கிழமை மடடும் 15 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை காலை முதல் சுமார் 15 ஏர் இந்தியா, இண்டிகோ, ஆகாசா ஏர்லைன்ஸ் விமானங்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இண்டிகோ விமான நிறுவனத்தின் ஐந்து சர்வதேச விமானங்களுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அதிகாரிகளுடன் தாங்கள் பணியாற்றி வருவதாகவும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் இண்டிகோ அறிவித்துள்ளது.

ஏர் இந்தியா - ஆகாசா விமானங்கள்

ஏர் இந்தியாவின் ஐந்து விமானங்கள், வெடிகுண்டு மிரட்டல் காரணமாக தரையிறக்கப்பட்டதாகவும், ஆனால், இதுவரை இந்த தகவலை ஏர் இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, ஆகாசா ஏர்லைன்ஸ், வெடிகுண்டு மிரட்டல் காரணமாக சில விமான சேவைகள் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது. ஆனால் எத்தனை விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது என்பதை தெரிவிக்கவில்லை. ஐந்து விமானங்கள் தரையிறக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுபோல, துபையிலிருந்து ஜெய்பூர் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுபோல, தொடர்ந்து விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதால் விமான போக்குவரத்து கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது.

கடந்த திங்கள்கிழமை முதல், இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல்களால் 35 விமானங்கள் அவரசமாக தரையிறக்கப்படுவது, தாமதமாகப் புறப்படுவது போன்ற நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டதாகவும் இதனைத் தடுக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.