காஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாபொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

ஹைதராபாத்: ஹிந்து அமைப்புகள் போராட்டத்தால் பதற்றம்! காவல்துறை தடியடி!

ஹிந்து அமைப்புகள் போராட்டத்தில் காவல்துறை மீது காலணி வீச்சு!

படம் | எக்ஸ் தளம்

Published On :

ஹைதராபாத்: சங்க் பரிவார் அமைப்புகளின் போராட்டத்தின்போது காவல்துறையினர் மீது காலணிகள் வீசப்பட்டதால் பதற்றமான சூழல் நிலவியது.

செகந்திராபாத் நகரிலுள்ள முத்யாலம்மன் கோயிலுக்குள் கடந்த அக்.14-ஆம் தேதி அதிகாலையில் ஆள் நடமாடமில்லாத நேரத்தில் நுழைந்த மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சல்மான் சலீம் தாக்குர் என்ற பொறியியல் பட்டதாரி இளைஞர் கர்ப்பக்கிரகத்திலிருந்த சாமி சிலையை அடித்து நொறுக்க முற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதில் சிலை உடைந்து சேதமானது.

கோயில் சிலை சேதப்படுத்தபட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கோயில்கள் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் தெலங்கானா அரசு மெத்தனப்போக்குடன் செயல்படுவதாக குற்றஞ்சாட்டி சனிக்கிழமை (அக்.19) மாநிலம் தழுவிய போராட்டத்தை முன்னெடுக்க விஷ்வ ஹிந்து பரிஷத்(விஹெச்பி) அழைப்பு விடுத்திருந்தது.

இந்த நிலையில், கோயில் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளதைக் கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த மக்களுடனும், விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் உள்பட பிற ஹிந்து அமைப்புகளுடனும் இணைந்து பாஜக போராட்டம் நடத்தியுள்ளது.

இதையடுத்து போராட்டத்தின் ஒருபகுதியாக, காவிக் கொடிகளை ஏந்தியபடி ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்த பலர் கோயிலின் முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களை நோக்கி போராட்டக்காரர்கள் தண்ணீர் பாக்கெட்டுகளை வீசி எறிந்தும் , காலணிகளை கழற்றி எறிந்தும் எதிர்ப்பு தெரிவித்ததால் பதற்றமான சூழல் நிலவியது.

இதைத்தொடர்ந்து காவல்துறையினர் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர். அதில் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகக் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, தெலங்கானாவில் குரூப்-1 தேர்வை ஒத்திவைக்கக் கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்களுக்கு ஆதரவாக மத்திய இணையமைச்சர் பந்தி சஞ்சய் ஹைதராபாத்தின் அசோக்நகரில் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.