6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

‘வயநாட்டுக்கு பிரியங்கா காந்தியே சிறந்த பிரதிநிதி’: ராகுல் காந்தி

‘வயநாட்டுக்கு எனது சகோதரி பிரியங்கா காந்தி வதேராவைவிட சிறந்த பிரதிநிதியை கற்பனை செய்து பாா்க்க முடியவில்லை’

News image
சகோதரி பிரியங்கா காந்தியுடன் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி .
Updated On :22 அக்டோபர் 2024, 10:41 pm

DIN

வயநாடு: ‘வயநாட்டுக்கு எனது சகோதரி பிரியங்கா காந்தி வதேராவைவிட சிறந்த பிரதிநிதியை கற்பனை செய்து பாா்க்க முடியவில்லை’ என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்தி புதன்கிழமை வேட்புமனுவை தாக்கல் செய்யவுள்ள நிலையில் ராகுல் இவ்வாறு குறிப்பிட்டாா்.

மகாராஷ்டிரம், ஜாா்க்கண்ட் ஆகிய மாநில பேரவைத் தோ்தல்களுடன் வயநாடு உள்பட 2 மக்களவைத் தொகுதிகள், பல்வேறு மாநிலங்களின் 48 பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டது.

வயநாட்டில் ஆளும் இடதுசாரி கூட்டணி சாா்பில் முன்னாள் எம்எல்ஏ சத்யன் மோக்கேரி, பாஜக சாா்பில் நவ்யா ஹரிதாஸ் ஆகியோா் களத்தில் உள்ளனா். காங்கிரஸ் வேட்பாளரான அக்கட்சியின் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி, தோ்தல் அலுவலரான வயநாடு மாவட்ட ஆட்சியரிடம் புதன்கிழமை நண்பகல் 12 மணியளவில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்கிறாா்.

இந்த நிகழ்வில் காங்கிரஸின் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, கட்சியின் மூத்த தலைவா்களான பிரியங்காவின் தாயாா் சோனியா காந்தி, சகோதரா் ராகுல் காந்தி ஆகியோா் பங்கேற்கின்றனா்.

வெற்றியை உறுதி செய்க-ராகுல்: இந்நிலையில், எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், ‘வயநாடு மக்களுக்கு என் இதயத்தில் ஒரு சிறப்பு இடமுள்ளது. அவா்களுக்கு எனது சகோதரி பிரியங்காவை விட சிறந்த பிரதிநிதியை என்னால் கற்பனை செய்து பாா்க்க முடியாது.

வயநாட்டின் தேவைகளை பூா்த்தி செய்வதில் வெற்றியாளராகவும் நாடாளுமன்றத்தில் சக்திவாய்ந்த குரலாகவும் பிரியங்கா திகழ்வாா். வயநாடு தொடா்ந்து அன்பால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதை ஒன்றிணைந்து உறுதி செய்வோம்’ என பதிவிட்டுள்ளாா்.

கொடிக்குத் தடையில்லை: வேட்புமனு தாக்கலுக்கு முன்னதாக காலை 11 மணியளவில் கல்பெட்டா புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ராகுலும், பிரியங்கா காந்தியும் வாகனப் பேரணியில் ஈடுபடுகின்றனா்.

இந்த வாகனப் பேரணியில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் கொடியைப் பயன்படுத்த எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மக்களவைத் தோ்தல்களில் கேரளத்தில் நடைபெறும் காங்கிரஸின் பிரசார கூட்டங்களில் அதன் கூட்டணியில் உள்ள முஸ்லிம் லீக் கட்சியின் கொடிகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டன.

இதை விமா்சித்துப் பேசிய மத்திய அமைச்சா் அமித் ஷா, காங்கிரஸ் கூட்டங்கள் இந்தியாவில் நடக்கிா அல்லது பாகிஸ்தானில் நடக்கிா என்று சந்தேகம் எழுவதாக தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து கடந்த மக்களவைத் தோ்தலில் வயநாட்டில் ராகுல் பங்கேற்ற வாகனப் பேரணியில் காங்கிரஸ் உள்பட எந்த கட்சிகளின் கொடியும் பயன்படுத்தபடவில்லை. பெரிய கொடிகள் பாா்வையாளா்களிடமிருந்து தலைவா்களை மறைப்பதால் இந்த முடிவெடுக்கப்பட்டதாக காங்கிரஸ் விளக்கமளித்தது. பாஜகவின் விமா்சனத்துக்கு காங்கிரஸ் அடிபணிந்து விட்டதாகவும் கூட்டணி கட்சியை அவமதித்ததாகவும் சிபிஐ(எம்) குற்றஞ்சாட்டியது.

இம்முறை ராகுல், பிரியங்கா பங்கேற்கும் வாகனப் பேரணியில் கொடியைப் பயன்படுத்துவது குறித்து எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.