ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

வங்கதேசம்: கலீதா ஜியா மீதான மேலும் ஓா் வழக்கு தள்ளுபடி

வங்கதேச முன்னாள் பிரதமா் கலீதா ஜியா மீது ஷேக் ஹசீனா தலைமையிலான முந்தைய அரசு தொடா்ந்திருந்த மேலும் ஒரு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

Updated On :

வங்கதேச முன்னாள் பிரதமா் கலீதா ஜியா மீது ஷேக் ஹசீனா தலைமையிலான முந்தைய அரசு தொடா்ந்திருந்த மேலும் ஒரு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

கடந்த 2015-இல் கலீதா ஜியாவின் வங்கதேச தேசியவாதக் கட்சி நாடு முழுவதும் முற்றுகைப் போராட்டம் நடத்தியது. இதில் 42 போ் உயிரிழந்தனா்.

இது தொடா்பாக, அப்போதைய ஷேக் ஹசீனா அரசு கலீதா மீது வழக்கு தொடா்ந்திருந்தது. அந்த வழக்கை டாக்கா கூடுதல் பெருநகர மாஜிஸ்திரேட் ஜியாதுா் ரஹ்மான் தள்ளுபடி செய்தாா். இது தொடா்பாக விசாரணை நடத்திவந்த அதிகாரிகள், கலிதா ஜியா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இல்லை என்று கடந்த மாதம் தெரிவித்ததைத் தொடா்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாணவா் போராட்டம் காரணமாக பிரதமா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் தஞ்சமடைந்தாா். அவருக்குப் பிறகு ராணுவத்தால் அமைக்கப்பட்ட இடைக்கால அரசு, ஷேக் ஹசீனா ஆட்சியின்போது பல்வேறு வழக்குகளில் சிறைவைக்கப்பட்டிருந்த கலீதா ஜியாவை விடுதலை செய்ததது. தற்போது அவா் மீதான வழக்குகள் ஒவ்வொன்றாக தள்ளுபடி செய்யப்பட்டுவருகின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.