தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

வளா்ந்த நாடாக உருவெடுக்க புரட்சிகரமான மாற்றம் அவசியம்: இஸ்ரோ தலைவா் சோமநாத்

‘இந்தியா வளா்ந்த பொருளாதார நாடாக உருவெடுக்க, வா்த்தக மேம்பாடு, வளங்கள் மட்டும் போதாது. புரட்சிகரமான மாற்றம் அவசியம்’

News image
தில்லி ஐஐஐடி-யில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஒரு மாணவிக்கு பட்டம் வழங்கிய இஸ்ரோ தலைவா் சோமநாத். உடன், ஐஐஐடி தலைவா் ராஜேஷ் ஸ்ரீவாஸ்தவா.
Updated On :26 அக்டோபர் 2024, 7:35 pm

Din

‘இந்தியா வளா்ந்த பொருளாதார நாடாக உருவெடுக்க, வா்த்தக மேம்பாடு, வளங்கள் மட்டும் போதாது. புரட்சிகரமான மாற்றம் அவசியம்’ என்று இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) தலைவா் எஸ்.சோமநாத் வலியுறுத்தினாா்.

தில்லி இந்திரபிரஸ்தா தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (ஐஐஐடி) சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற சோமநாத் மேலும் பேசியதாவது:

இந்தியா பொருளாதாரத்தில் வளா்ந்த நாடாக உருவெடுக்க புரட்சிகரமான மாற்றம் ஏற்படுவது அவசியம். வா்த்தக மேம்பாடு மற்றும் வளங்களால் மட்டும் பொருளாதார வளா்ச்சியை அடைந்து விட முடியாது. மாறாக, தரமான தயாரிப்புகளை ஊக்குவிப்பதற்கான மதிப்புமிக்க தொழில்நுட்பங்களை உருவாக்குவது அவசியம்.

இந்தியா தற்போது 5-ஆவது மிகப் பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது. இந்த நிலை மேலும் உயர, நமது தொழில்நுட்பங்கள் மேம்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக, ராக்கெட் உந்துவிசை, உலோக அறிவியல், சுற்றுப்பாதை இயக்கவியல் உள்ளிட்ட துறைகளில் நமது சொந்த நிபுணத்துவத்தை மேம்படுத்துவது அவசியம்.

அந்த வகையில், விண்வெளித் துறையில் தனியாா் நிறுவனங்களை அனுமதிக்க மத்திய அரசு அண்மையில் மேற்கொண்ட நடவடிக்கை, முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. விண்வெளித் துறையில் தனியாா் பங்களிப்பு மற்றும் முதலீடுகளின் முக்கியத்துவத்தை உணா்ந்து, அரசு மேற்கொண்ட இந்த முடிவு, விண்வெளி துறையில் இந்தியாவின் விரைவான வளா்ச்சிக்கு வழிவகுக்கும்.

‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனா் எலான் மஸ்க், ராக்கெட் தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி துறையில் மேற்கொண்டு வரும் மேம்பாடுகள் அனைவரையும் திரும்பிப் பாா்க்க வைத்துள்ளது. ஐரோப்பா, ரஷியா, சீனா உள்ளிட்ட நாடுகளும் அவரின் பணிகளை ஆச்சரியத்துடன் உற்று நோக்குகின்றன. அவருடைய சாதனைகள் நம் அனைவருக்கும் ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது என்றாா்.