45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கான்பூரில் பெண்ணைக் கொன்று புதைத்த ஜிம் பயிற்சியாளர் கைது

கான்பூரில் பெண்ணைக் கொன்று உடலை மாவட்ட ஆட்சியர் வீட்டின் அருகே புதைத்த ஜிம் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

News image
கோப்புப்படம்.
Updated On :27 அக்டோபர் 2024, 8:20 am

DIN

கான்பூரில் பெண்ணைக் கொன்று உடலை மாவட்ட ஆட்சியர் வீட்டின் அருகே புதைத்த ஜிம் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம், கான்பூரில் கடந்த 24ஆம் தேதி பெண் ஒருவருக்கும், ஜிம் பயிற்சியாளருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் அந்த பெண்ணைக் கொன்ற ஜிம் பயிற்சியாளர், உடலை கான்பூர் மாவட்ட ஆட்சியர் வீட்டின் அருகே புதைத்ததாகக் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் ஜிம் பயிற்சியாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது, கொலை செய்யப்பட்ட பெண் குற்றம் சாட்டப்பட்டவரின் ஜிம்மிற்கு சென்று பயிற்சி பெற்று வந்துள்ளார்.

இருவருக்கும் ஏதோ ஒரு விவகாரத்தில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த வாக்குவாதத்தில் அந்த பெண்ணைக் கொன்று அவரது உடலை, ஜிம் பயிற்சியாளர் புதைத்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் வழக்கை தவறாக வழிநடத்த முயன்றதாகவும், கடுமையான விசாரணையின்போது உண்மை வெளி வந்ததாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.