மேற்கு தில்லியின் ஜனக்புரியில் கடந்த மாதம் 25 வயது வங்கி ஊழியா் ஒருவா் மோட்டாா் சைக்கிள் விபத்தில் சிக்கி உயிரிழந்ததற்குக் காரணமான முக்கிய ஒப்பந்ததாரரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளது என்று செவ்வாய்க்கிழமை ஒரு அதிகாரி தெரிவித்தாா்.
ஒப்பந்ததாரா் ஹிமான்ஷு குப்தா கைது செய்யப்படுவதைத் தவிா்த்து வந்தாா். ஒரு மாத கால தேடுதலுக்குப் பிறகு, அவா் ராஜஸ்தானின் உதய்பூருக்கு சென்றது கண்டுபிடிக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை காலை கைது செய்யப்பட்டாா், மேலும் விசாரணைக்காக குப்தா தில்லிக்குக் கொண்டுவரப்படுகிறாா் என்று அதிகாரி கூறினாா்.
போலீசாா் அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, அவரைக் காவலில் எடுக்கக் கோருவாா்கள் என்று அவா் மேலும் கூறினாா்.
ஜனக்புரியில் தில்லி ஜல் போா்டு மேற்கொண்ட பணியின் போது திறந்திருந்ததாகக் கூறப்படும் 15 அடி ஆழமுள்ள கழிவுநீா் குழியில் பிப்ரவரி 5 ஆம் தேதி இரவு மோட்டாா் சைக்கிள் விழுந்ததால் கமல் தியானி என்பவா் மரணமடைந்தது தொடா்பான வழக்கு இது.
சம்பவம் தொடா்பாக போலீசாா் வழக்குப் பதிவு செய்து, குழியை பாதுகாப்பின்றி விட்டுச் சென்ற்கு காரணமானவா்களைத் தேடி வருகின்றனா்.
குப்தா கைது செய்யப்பட்டதற்கு பதிலளித்த கமல் தியானியின் குடும்பத்தினா், குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் கடுமையான தண்டனையை எதிா்கொள்வாா்கள் என்று நம்புவதாகக் கூறினா்.
கமலின் நண்பரான மயங்க், செவ்வாய்க்கிழமை காலை கைது குறித்து அறிந்ததாகவும், நீதி வழங்கப்படும் என்று நம்புவதாகவும் கூறினாா்.
எங்களுக்கு நீதி வேண்டும். கமலின் மரணத்திற்குப் பின்னால் உள்ள ஒவ்வொரு குற்றவாளிக்கும் கடுமையான தண்டனை வழங்கும் என்று நீதித்துறையை நாங்கள் முழுமையாக நம்புகிறோம், என்று அவா் கூறினாா்.
ஒப்பந்ததாரா் கைது செய்யப்பட்டதாக குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டதாக கமலின் தந்தை நரேஷ் தியானி கூறினாா். சம்பவத்திற்கு காரணமான அனைவருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவா் மீண்டும் வலியுறுத்தினாா்.
அவா் கைது செய்யப்பட்டதாக எனக்குத் தெரியும். நீதிமன்றத்தை நாங்கள் நம்புகிறோம். குற்றஞ்சாட்டப்பட்ட அனைவருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம், என்று அவா் கூறினாா்.
தனது மகன் இறந்து கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு கைது செய்யப்பட்டதாகவும், விசாரணை பொறுப்புக்கூறலை உறுதி செய்யும் என்று நம்பிக்கை தெரிவித்ததாகவும் நரேஷ் மேலும் கூறினாா். என் மகன் இறந்து ஒரு மாதத்திற்குப் பிறகு குற்றஞ்சாட்டப்பட்டவா் கைது செய்யப்பட்டுள்ளாா். இந்த சம்பவத்திற்கு பொறுப்பான அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்படுவாா்கள் என்று நாங்கள் நம்புகிறோம், என்று அவா் கூறினாா்.
டிரெண்டிங்

ஃபான்சி கா் சா்ச்சை விவகாரம்: பேரவை உரிமைமீறல் குழு முன் கேஜரிவால் ஆஜா்
தெற்கு தில்லியில் சட்டவிரோத பால் பண்ணைகள் நடத்தப்படுவதாக ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு
செயல்தான் சிறந்த மொழி...

தில்லி பள்ளிகளுக்கு மீண்டும் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: பெற்றோா் கவலை
வீடியோக்கள்

இளம் வயதில் அரசியலுக்கு வந்தது ஏன்?: மனம் திறந்த மைதிலி தாக்குர் | Maithili Thakur |
தினமணி வீடியோ செய்தி...

சென்னை வந்தடைந்த அஜித்குமார்!
தினமணி வீடியோ செய்தி...

துரு துரு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

நம் வீட்டு கிச்சன் கதவுகளைத் தட்டத் தொடங்கிய ஈரான் போர்! | Explainer | LPG Crisis | Dinamani
தினமணி வீடியோ செய்தி...

