
விமான நிலையங்கள் மற்றும் மிகப்பெரிய தங்கும் விடுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக, மகாராஷ்டிர மாநிலம் கோண்டியா பகுதியைச் சேர்ந்த 35 வயது நபரை நாக்பூர் காவலதுறையினர் கைது செய்திருக்கிறார்கள்.
ஜக்தீஷ் உக்கி என்பவரை நாக்பூர் காவல்துறையின் சிறப்புப் பிரிவினர் கைது செய்திருக்கிறார்கள். பயங்கரவாதம் குறித்த புத்தகத்தை எழுதியவரும், ஏற்கனவே இவர் 2021ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டவர் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
விமானங்களுக்கும், நட்சத்திர விடுதிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட மின்னஞ்சல்களை ஆராய்ந்ததில் அதன் பின்னணியில் ஜக்தீஷ் உக்கி இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
அரசு அலுவலகங்கள், பிரதமர் அலுவலகம், ரயில்வே அமைச்சகம், விமான நிலையங்கள் என பல்வேறு துறைகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் அனுப்பியவர் என்றும் தெரிய வந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.