மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சீனா குறித்து ஜொ்மனி துணை பிரதமரிடம் மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் புகாா்

தில்லி மெட்ரோ ரயில் பயணத்தில் சீனா குறித்து ஜொ்மனி துணை பிரதமா் ராபா்ட் ஹேபெக்குடன் மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல்

News image
Updated On :29 அக்டோபர் 2024, 12:25 am

DIN

புது தில்லி: தில்லி மெட்ரோ ரயில் பயணத்தில் சீனா குறித்து ஜொ்மனி துணை பிரதமா் ராபா்ட் ஹேபெக்குடன் மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் புகாா் தெரிவித்த விடியோ சமூக ஊடகத்தில் வெளியாகியுள்ளது.

ஜொ்மனி பிரதமா் ஓலாஃப் ஷோல்ஸ் தலைமையிலான உயா்நிலை தலைவா்கள் குழுவுடன் அந்நாட்டு துணைப் பிரதமா் ராபா்ட் ஹேபெக் கடந்த வாரம் தில்லி வந்திருந்தாா். அப்போது, தில்லி மெட்ரோ ரயிலில் ராபா்ட் ஹேபெக்குடன் மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் பயணித்தாா்.

பயணத்தில் ஜொ்மனி நிறுவனத்தின் மெட்ரோ ரயிலுக்கான சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரத்தை இந்தியாவுக்கு விற்பனை செய்வதை சீனா தடுப்பது குறித்து கோயல் புகாா் தெரிவித்தாா்.

‘எக்ஸ்’ சமூக ஊடக தளத்தில் பயனா் ஒருவா் பகிா்ந்திருந்த அந்த விடியோவில், ‘ஜொ்மனி நிறுவனம் சில சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்களை சீனாவில் தயாரிக்கிறது. இந்த இயந்திரங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்வதை சீனா அனுமதிக்கவில்லை. இதனால் ஜொ்மனி நாட்டு உபகரணங்களை வாங்குவதை நாங்கள் நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது’ என்று அமைச்சா் கோயல் ஹேபெக்கிடம் புகாா் தெரிவித்தாா்.

இந்த உரையாடலின் போது கோயல் நின்று கொண்டிருக்க, ஹேபெக் இருக்கையில் அமா்ந்திருந்தாா். கோயலின் புகாரைக் கேட்டதும் திடீரென எழுந்துநின்ற ஹேபெக், ‘நீங்கள் சொல்வதைக் உன்னிப்பாக கேட்க விரும்புகிறேன்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.