சென்னையில் உள்ள 21 சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேக்கம் இல்லை: மாநகராட்சி தகவல்! 137 புற்றுநோய் மருந்துகளுக்கு 30% லாப வரம்பு: மத்திய அரசு நடவடிக்கை! ஏர் இந்தியா விமானங்கள் சவூதி அரேபியாவுக்கு அக். 24 வரை ரத்துஇணையத்தை சிறார்கள் பயன்படுத்த தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்!சென்னை, திருச்சி, கோவை உள்பட இன்று 17 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை!

சர்தார் வல்லபபாய் படேல் பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதை!

சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்தநாளையொட்டி குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் அவருக்கு மரியாதை செலுத்தினர்.

சர்தார் வல்லபபாய் படேலுக்கு மரியாதை செலுத்தும் பிரதமர் நரேந்திர மோடி - PTI

Updated On :

சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்தநாளையொட்டி குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் அவருக்கு மரியாதை செலுத்தினர்.

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் இன்று (அக். 31) கொண்டாடப்படுகிறது.

குடியரசுத் தலைவர்

வல்லபபாய் படேலின் உருவப் படத்துக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு மரியாதை செலுத்தினார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த படேலின் படத்துக்கு திரெளபதி முர்மு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதன் புகைப்படங்களை குடியரசுத் தலைவர் மாளிகை பகிர்ந்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி

படேலின் பிறந்தநாளையொட்டி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி,

பாரத ரத்னா சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்தநாளில் அவருக்கு எனது மனமார்ந்த அஞ்சலி. தேசத்தின் ஒற்றுமை மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்பதே அவரது வாழ்க்கையின் முதன்மையானதாக இருந்தது. அவரது ஆளுமையும் பணியும் நாட்டின் ஒவ்வொரு தலைமுறையினருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும் எனப் பதிவிட்டுள்ளார்.

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி நர்மதை நதிக்கரையில் அவரின் உருவச்சிலை அமைந்துள்ள குஜராத் மாநிலம் கேவாடியா பகுதியில் விமானப் படை சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு வீரர்களின் சாகசங்களைக் கண்டு ரசித்தார்.

சர்தார் வல்லபபாய் படேல் சிலை அருகே நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சி

சர்தார் வல்லபபாய் படேல் சிலை அருகே நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சி - ANI

இதேபோன்று குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், தில்லி துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனா, ஆகியோர் மலர் தூரி மரியாதை செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.