திரைத் துறை பாலியல் வழக்கு: நடிகர் முகேஷ், எடவேல பாபுவுக்கு முன்ஜாமீன்!

கேரள திரைத் துறை பாலியல் வழக்கில் மலையாள திரைப்பட நடிகரும் எம்.எல்.ஏ.வுமான முகேஷுக்கு முன்ஜாமீன் கிடைத்தது.
நடிகர்கள் முகேஷ் / எடவேல பாபு
நடிகர்கள் முகேஷ் / எடவேல பாபுகோப்புப் படங்கள்
Published on
Updated on
1 min read

கேரள திரைத் துறை பாலியல் வழக்கில் மலையாள திரைப்பட நடிகரும் எம்.எல்.ஏ.வுமான முகேஷுக்கு முன்ஜாமீன் வழங்கி எர்ணாகுளம் நீதிமன்றம் இன்று (செப். 5) உத்தரவிட்டது.

திரைத் துறையில் பணிபுரியும் பெண்கள், நடிகைகள் அளித்த பாலியல் புகார்களை சிறப்புக் குழு விசாரித்துவரும் நிலையில் முன்ஜாமீன் கேட்டு நடிகர் முகேஷ் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் முகேஷுக்கு முன்ஜாமீன் வழங்கியது.

இதேபோன்று நடிகர் எடவெல பாபுவும் முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்திருந்த மனுவின் மீதான விசாரணையில் முன் ஜாமீன் வழங்கப்பட்டது.

அடுக்கடுக்கான பாலியல் புகார்கள்

மலையாள திரையுலகில் பாலியல் அத்துமீறல்கள் உள்ளதாக ஹேமா குழு அறிக்கை அளித்திருந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திரைத் துறையில் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக முன்வந்து புகாரளிக்க வேண்டும் என்றும், அவர்களின் புகாரின் பேரில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கேரள அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

பாலியல் புகார்களை விசாரிக்க 7 அதிகாரிகள் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவையும் கேரள அரசு அமைத்தது.

இதன் தொடர்ச்சியாக மலையாள திரையுலகைச் சோ்ந்த தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குநர்கள் மீது அடுத்தடுத்த பாலியல் புகார்கள் பதிவாகி வருகின்றன.

கேரள மாநில திரைப்பட அகாதெமியின் தலைவா் இயக்குநா் ரஞ்சித், மலையாளத் திரைப்பட நடிகா்கள் சங்கத்தின் பொதுச் செயலாளா் நடிகா் சித்திக் ஆகியோா் மீது பாலியல் புகார் எழுந்தது. இதனையடுத்து தங்கள் பதவிகளை அவர்கள் ராஜிநாமா செய்தனர். மேற்கு வங்கத்தைச் சோ்ந்த நடிகையொருவா் அளித்த புகாரில் கேரள இயக்குநா் ரஞ்சித் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

நடிகரும், ஆளும் சிபிஐ(எம்) எம்எல்ஏவுமான முகேஷ், ஜெயசூா்யா, மணியன்பிள்ளை ராஜு, நிவின் பாலி ஆகியோா் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதியப்பட்டுள்ளது.

முகேஷுக்கு முன்ஜாமீன்

இந்நிலையில், நடிகர் முகேஷ் முன்ஜாமீன் கேட்டு நடிகர் முகேஷ் எர்ணாகுளம் கீழமை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

தன்னை மிரட்டுவதற்காக தன் மீது கலங்கள் ஏற்படுத்துவதற்காக பொய்யாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக முகேஷ் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இதேபோன்று நடிகர் எடவெல பாபுவும் முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்திருந்த மனுவின் மீதான விசாரணையில் முன் ஜாமீன் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com