பழங்குடியினர் நல வாரியத்தின் பணத்தை தேர்தலுக்காக செலவழித்த காங்கிரஸ் எம்.பி.
கர்நாடக எம்.பி. பதவியிலிருந்து துகாராம் பதவி விலக வேண்டும் என்று சட்டப்பேரவை உறுப்பினர் ரவிக்குமார் கோரிக்கை


மக்களவை தேர்தலில் ஏற்படும் செலவுக்காக பழங்குடியினர் நல வாரியத்தின் 21 கோடி ரூபாயை பயன்படுத்தியதாக காங்கிரஸ் எம்.பி. துகாராம் மீது அமலாக்க இயக்குநரகத்தின் குற்றப்பத்திரிகையில் கூறியது.
இதனைத் தொடர்ந்து, எம்.பி. பதவியிலிருந்து துகாராம் பதவி விலக வேண்டும் என்று சட்டப்பேரவை உறுப்பினரான ரவிக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
ரவிக்குமார் தெரிவித்ததாவது, ``பல்லாரி தேர்தலில் வெற்றி பெற, தலித்துகளுக்கான கர்நாடக மகரிஷி வால்மீகி பட்டியல் பழங்குடியினர் மேம்பாட்டுக் கழகத்திலிருந்து ரூ. 21 கோடி செலவிடப்பட்டதாக, அமலாக்கத்துறை தனது குற்றப்பத்திரிகையில் தெளிவாகக் கூறியுள்ளது. ஆகையால், மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து துகாராம் பதவி விலக வேண்டும்.
அரசின் தலையீடும் ஆதரவும் இல்லாமல், வால்மீகி பழங்குடியினர் நல வாரியம் ஊழல் நடந்திருக்க முடியாது.
மேலும், 187 கோடி மோசடி வழக்கில், முன்னாள் அமைச்சர் நாகேந்திரா முக்கிய பங்கு வகித்ததாகவும் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் ஆகியோரால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு, நாகேந்திராவின் பெயரைக் குறிப்பிடவில்லை; அதில் இரண்டு அதிகாரிகளின் பெயர்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன. முன்னாள் அமைச்சரைப் பாதுகாக்கவே, சிறப்பு புலனாய்வுக் குழுவை மாநில அரசு பயன்படுத்துகிறது.
ஊழலை மூடிமறைக்கவே சிறப்பு புலனாய்வுக் குழு செயல்படுகிறது; இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணை மற்றும் குற்றப்பத்திரிகை குறித்தும் மக்களுக்கு சந்தேகம் உள்ளது.
அதுமட்டுமின்றி, பாஜகவின் மாநில அலுவலகமான ஜெகன்நாத் பவனைதான், பயங்கரவாதிகள் முதலில் குறிவைத்ததாக என்ஐஏ ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஜெகந்நாத் பவனை வெடிக்கச் செய்வதே, அவர்களின் முதல் இலக்காக இருந்தது.
ஆனால் அவ்வாறு செய்யத் தவறியதால், அவர்கள் ராமேஸ்வரம் கஃபே மீது குண்டு வீசினர். மாநில போலீஸ் புலனாய்வுப் பிரிவு என்ன செய்கிறது? பாஜக தலைமையகத்திற்கு அருகில் 24 மணிநேரமும் காவல்துறை பேருந்தின் பயன் என்ன?’’ என்று கூறியுள்ளார்.
மக்களவை தேர்தலில் பல்லாரி தொகுதியில் பாஜகவின் பி. ஸ்ரீராமுலுவை துக்காராம் தோற்கடித்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...