தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்து ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் ரூ. 1 கோடி வெள்ள நிவாரண நிதியை வழங்கினார்.
ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸில் உள்ள ரேவந்த் ரெட்டி இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தெலங்கானாவில் 29 பேர் பலி
தெலங்கானாவில் கடந்த ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பா் 3-ஆம் தேதி வரை பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் மாநிலத்தின் 29 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
முதல்கட்ட மதிப்பீட்டின் படி, மழை வெள்ளத்தால் மாநிலத்துக்கு ரூ. 5,438 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மாநில தலைமைச் செயலாளர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் சார்பில், தெலங்கானாவின் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 1கோடிக்கான காசோலையை புதன்கிழமை வழங்கினார்.