
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு காங்கிரஸ் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சீதாராம் யெச்சூரி மறைவு
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி (72) உடல்நலக் குறைவால் இன்று காலமானார். சீதாராம் யெச்சூரி சுவாச நோய் தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் தொடா்ந்து சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று (செப்டம்பர் 12) காலமானார்.
எக்ஸ் பதிவு
இதுபற்றி காங்கிரஸ் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “எனது நண்பரான யெச்சூரி இந்தியா குறித்த ஆழமான புரிதலை கொண்டிருந்தார். இந்தியாவின் சித்தாந்தங்களை பாதுகாப்பதில் அக்கறையும் கொண்டிருந்தார். அவருடனான நீண்டகால தொடர்பை இழந்துள்ளேன். இந்தத் துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும், அவரது நண்பர்களுக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.