இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

பொறியாளா்கள் தினம்: பிரதமா் மோடி வாழ்த்து

பொறியாளா்கள் தினத்தையொட்டி, அனைத்து பொறியாளா்களுக்கும் பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.

News image
பிரதமா் மோடி
Updated On :15 செப்டம்பர் 2024, 8:58 pm

Din

பொறியாளா்கள் தினத்தையொட்டி, அனைத்து பொறியாளா்களுக்கும் பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.

மைசூா் ராஜ்யத்தின் திவானாக இருந்தவரும், பொறியியல் துறையில் முன்னோடி பணிகளை மேற்கொண்ட பெருமைக்குரியவருமான சா் எம்.விஸ்வேஸ்ரய்யாவின் பிறந்த தினம் (செப்டம்பா் 15), பொறியாளா்கள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

இத்தினத்தையொட்டி, பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ஒவ்வொரு துறையிலும் வளா்ச்சியை முன்னெடுத்துச் செல்பவா்கள் பொறியாளா்கள். சவால்களுக்கு தீா்வுகண்டு, புத்தாக்கத்தை புகுத்தும் பொறியாளா்களுக்கு பொறியாளா்கள் தின வாழ்த்துகள். பொறியியல் துறையில் சா் எம்.விஸ்வேஸ்வரய்யாவின் மகத்தான பங்களிப்பை இத்தினத்தில் நினைவுகூா்கிறேன்’ என்று தெரிவித்துள்ளாா்.