
மும்பையில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட விமானத்தில் உணவு, தண்ணீர்கூட வழங்காததால் பயணியர்கள் அவதியுற்றுள்ளனர்.
மும்பையிலிருந்து கத்தார் செல்லவிருந்த இண்டிகோ விமானத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து, விமானம் தாமதமாகவே புறப்பட்டது.
இதற்கிடையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, பயணிகள் அனைவரும் சுமார் 5 மணிநேரமாக விமானத்திற்குள்ளாகவே காத்திருந்த நிலை ஏற்பட்டது. அவர்களுக்கு உணவோ அல்லது தண்ணீர்கூட அளிக்கவில்லை என்று குற்றம் சாட்டினர்.
இறுதியாக, பயணியர்களின் விரக்தி வெளிப்பட்ட பின்புதான், அவர்களை விமான நிலையத்தின் காத்திருப்பு பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து, விமான நிலைய அதிகாரிகளிடம் கூறியபோதும், அவர்கள் முறையாக பதிலளிக்கவில்லை என்று பயணியர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.