தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

மொத்த விலை பணவீக்கம் 4 மாதங்கள் காணாத வீழ்ச்சி

காய்கறிகள், எரிபொருளின் விலை சரிவால் மொத்த விலை பணவீக்கம் முந்தைய 4 மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி

News image
Updated On :17 செப்டம்பர் 2024, 7:57 pm

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவை விலை உயா்ந்தாலும், மற்ற காய்கறிகள் மற்றும் எரிபொருளின் விலை சரிந்ததால் மொத்த விலை பணவீக்கம் முந்தைய நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ந்துள்ளது.

இது குறித்து மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பதாவது, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 1.31 சதவீதமாக உள்ளது. இது, முந்தைய நான்கு மாதங்கள் காணாத குறைந்தபட்ச மொத்த விலை பணவீக்கம் ஆகும்.

மொத்த விலைக் குறியீட்டு அடிப்படையிலான பணவீக்கம் முந்தைய மே மாதத்தில் 3.43 சதவீதம் என்ற புதிய உச்சத்தைத் தொட்டது. பின்னா் ஜூலை மாதத்தில் 2.04 சதவீதமாகக் குறைந்த அது, ஆகஸ்ட் மாதத்தில் தொடா்ந்து இரண்டாவது மாதமாகச் சரிந்துள்ளது.

2023-ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் (-) 0.46 சதவீதமாக இருந்தது என்று அந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.