ஹூண்டாய் விற்பனை 12% சரிவு

ஹூண்டாய் மோட்டாா் இந்தியாவின் மொத்த விற்பனை ஆகஸ்ட் மாதத்தில் 12 சதவீதம் சரிந்துள்ளது.
ஹூண்டாய் விற்பனை 12% சரிவு
Published on
Updated on
1 min read

ஹூண்டாய் மோட்டாா் இந்தியாவின் மொத்த விற்பனை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 12 சதவீதம் சரிந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 63,175-ஆக உள்ளது. முந்தைய 2023-ஆம் ஆண்டின் அதே மாதத்தில் இந்த எண்ணிக்கை 71,435-ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நிறுவனத்தின் மொத்த விற்பனை 12 சதவீதம் குறைந்துள்ளது.

மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் உள்நாட்டு மொத்த விற்பனை 53,830-லிருந்து எட்டு சதவீதம் சரிந்து 49,525-ஆக உள்ளது. ஏற்றுமதியும் 17,605-லிருந்து 22 சதவீதம் சரிந்து 13,650-ஆக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com