அதிகாரப்பூர்வ இல்லத்திலிருந்து கேஜரிவால் வெளியேறுவது எப்போது? ஆம் ஆத்மி பதில்

கேஜரிவால் தனது அதிகாரப்பூர்வ இல்லத்திலிருந்து எப்போது வெளியேறுகிறார் என்று ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.
அரவிந்த் கேஜரிவால்
அரவிந்த் கேஜரிவால்Center-Center-Delhi
Published on
Updated on
1 min read

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தனது அதிகாரப்பூர்வ இல்லத்திலிருந்து எப்போது வெளியேறுவார் என ஆம் ஆத்மியின் மாநிலங்களவை எம்பி சஞ்சய் சிங் தெரிவித்தார்.

கலால் கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த வெள்ளியன்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்த நிலையில், நேற்று முதல்வர் பதவியிலிருந்து விலகும் கடிதத்தைத் துணைநிலை ஆளுநர் வி.கே.சக்ஸேனாவிடம் கேஜரிவால் அளித்தார்.

இதற்கு முன்னதாக செவ்வாய்க்கிழமை பிற்பகலில் ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் கடசியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்குடன் அரவிந்த் கேஜரிவால் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில எடுக்கப்பட்ட முடிவின்படி துணைநிலை ஆளுநர் சிக்ஸேனாவுடன் ராஜ் நிவாஸில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்த்தினர்.

இதையடுத்து புதிய முதலவராக கல்வி அமைச்சர் அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், ஆட்சியமைக்க துணைநிலை ஆளுநரிடம் நேற்று அதிஷி உரிமை கோரினார். இந்த நிலையில் தில்லியின் முதல்வராக அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதையடுத்து தில்லியின் மூன்றாவது பெண் முதல்வர் இவராவார்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்திந்த சஞ்சய் கூறியது,

முதல்வராக இருந்தபோது கேஜரிவால் அனுபவித்த அனைத்து வசதிகளையும் விட்டு, அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து அடுத்த ஒரு வாரத்தில் காலி செய்வார் என ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.

நேற்று ராஜினாமா செய்த கேஜரிவால், ஒரு முதல்வருக்குக் கிடைக்கும் பாதுகாப்பு உள்பட அனைத்து வசதிகளையும் விட்டுவிட்டு மக்கள் மத்தியில் சாமானியனாக வாழ்வேன் என்று கேஜரிவால் கூறினார்.

கேஜரிவால் சிறையிலிருக்கும்போது உடல் ரீதியாக தீங்கு விளைவிக்கும் முயற்சிகள் நிறைய நடந்ததாகவும், ஆனால் அவர் அதை தடுக்கவில்லை. கடந்த 155 நாள்கள் சிறையில் வாழ்ந்தேன் அப்போது கடவுள் என்னைக் காப்பாற்றினார். இப்போதும் கடவும் என்னைக் காப்பாற்றுவார் என்று கேஜரிவால் கூறியுள்ளார்.

கேஜரிவால் எங்கு வசிக்கிறார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று ஆம் ஆத்மி தலைவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com