மருத்துவர் பாலியல் கொலை: குற்றவாளியின் உடைகளைக் கைப்பற்றுவதில் காவல்துறை தாமதம்!

குற்றம் சாட்டப்பட்டவரின் உடைகளைக் கைப்பற்ற காவல் துறையினர் இரு நாள்கள் தாமதப்படுத்தியதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
 சஞ்சய் ராய்
சஞ்சய் ராய்கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளி சஞ்சய் ராயின் உடைகளைக் கைப்பற்றுவதில் காவல் துறையினர் தாமதம் செய்துள்ளதாக (சிபிஐ) மத்தியப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.

ஆக. 9ஆம் தேதி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட நிலையில், மறுநாளே சஞ்சய் ராய் வழக்கில் சேர்க்கப்பட்டார்.

எனினும், அவரின் உடைகளைக் கைப்பற்ற காவல் துறையினர் இரு நாள்கள் தாமதப்படுத்தியதாக சிபிஐ தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் சம்பவத்தன்று குற்றவாளி அணிந்திருந்த உடை மிகப்பெரிய ஆதாரம் எனவும் எனவும் சிபிஐ குறிப்பிட்டுள்ளது.

சிபிஐ விசாரணை

கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் உள்ள கருத்தரங்கில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் ஆக. 9ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தைக் கண்டித்து உரிய நீதி வேண்டி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உயிரிழந்த மருத்துவருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இளநிலை மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மருத்துவர்களின் போராட்டம் ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், 5 முறை பேச்சுவார்த்தைக்கு முதல்வர் மமதா பானர்ஜி அழைப்பு விடுத்தார். இதனை மருத்துவர்கள் நிராகரித்து வந்த நிலையில் செப். 16 இரவு முதல்வர் மமதா பானர்ஜி - இளநிலை மருத்துவக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

ஆக. 9ஆம் தேதி பாலியல் கொலை நடந்த நிலையில், ஆக. 14ஆம் தேதி காவல் துறையிடமிருந்து சிபிஐ வசம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது. மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் மற்றும் தலா காவல் நிலைய பொறுப்பு அதிகாரி அபிஜித் மோண்டல் ஆகியோரிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டது.

விசாரணையில் காவல் துறை தாமதம்

இந்த விசாரணையின் முடிவில் சந்தீப் கோஷும், அபிஜித் மோண்டலும் முக்கிய ஆதாரங்களை மறைக்க முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து சஞ்சய் ராய் உடனான தொடர்பு குறித்தும் அவர்களிடம் சிபிஐ விசாரணை நடந்த்தப்பட்டு வருகிறது.

மருத்துவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்த நிலையில், அவரின் உடலை எரிப்பதிலேயே சந்தீப் கோஷ் மும்முரமாக இருந்ததாகவும், குற்றச்சம்பவம் நடந்தபோது அவர் தலைமறைவாகியிருந்ததாகவும் சிபிஐ தெரிவித்தது.

இதேபோன்று குற்றச் சம்பவம் நடந்த மறுநாளான ஆக. 10ஆம் தேதியே குற்றத்தில் சஞ்சய் ராய் பெயர் இணைக்கப்பட்ட நிலையில், அவரின் ஆடைகளைக் கண்டறிவதில் இரு நாள்கள் காவல் துறையினர் தாமதம் செய்ததாகவும் குறிப்பிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com