பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

அதிஷி அமைச்சரவையில் யார் யாருக்கு வாய்ப்பு? அறிவிப்பு!

தில்லியின் புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளவர்கள்.

News image
அதிஷி- ANI
Updated On :19 செப்டம்பர் 2024, 8:43 am

DIN

தில்லியின் புதிய முதல்வர் அதிஷி தலைமையிலான புதிய அமைச்சரவையின் பட்டியலை ஆம் அத்மி கட்சி வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது.

மேலும், அதிஷி மற்றும் புதிய அமைச்சர்கள் சனிக்கிழமை(செப். 21) பதவியேற்றுக் கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரவிந்த் கேஜரிவால் ராஜிநாமா

கலால் கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமீன் பெற்ற தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, புதிய முதல்வராக அமைச்சர் அதிஷி தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை பதவியை ராஜிநாமா செய்தார்.

இதையடுத்து, புதிய அமைச்சரவை பதவியேற்க அதிஷி துணைநிலை ஆளுநரை நேரில் சந்தித்து உரிமை கோரினார்.

புதிய அமைச்சர்

தில்லியின் முதல்வராக அதிஷி வருகின்ற சனிக்கிழமை பதவியேற்பார் என்றும், அவருடன் அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், அமைச்சரவைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. சுல்தான்பூர் எம்.எல்.ஏ. மஜ்ரா முகேஷ் அஹ்லாவத்துக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், செளரப் பரத்வாஜ், கைலாஷ் கெலாட், கோபால் ராய் மற்றும் இம்ரான் ஹுசைன் ஆகியோர் மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.