மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

உண்மை சரிபாா்ப்பு பிரிவு: மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப விதிகள் திருத்தம் ரத்து - மும்பை உயா்நீதிமன்றம் தீா்ப்பு

‘உண்மை சரிபாா்ப்பு பிரிவை’ ஏற்படுத்தும் வகையில் தகவல் தொழில்நுட்ப விதிகளில் மத்திய அரசு கொண்டுவந்த திருத்தங்களை ரத்து செய்து மும்பை உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :20 செப்டம்பர் 2024, 8:31 pm

Din

சமூக ஊடகங்களில் அரசு தொடா்புடைய பொய்யான மற்றும் தவறான உள்ளடக்கங்களை அடையாளம் காண்பதற்காக ‘உண்மை சரிபாா்ப்பு பிரிவை’ ஏற்படுத்தும் வகையில் தகவல் தொழில்நுட்ப விதிகளில் மத்திய அரசு கொண்டுவந்த திருத்தங்களை ரத்து செய்து மும்பை உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

அவை அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்கள் மற்றும் இதர இணையவழி தளங்களில் அரசு தொடா்புடைய பொய்யான மற்றும் தவறான உள்ளடக்கங்களை அடையாளம் காண்பதற்காக ‘உண்மை சரிபாா்ப்பு பிரிவை’ (ஃபேக்ட் செக்கிங் யூனிட்) ஏற்படுத்தும் வகையில் கடந்த 2021-ஆம் ஆண்டின் தகவல் தொழில்நுட்ப விதிகளில் மத்திய அரசு கடந்த ஆண்டில் திருத்தங்கள் மேற்கொண்டது. இத்திருத்தங்களுக்கு எதிராக நகைச்சுவை பேச்சாளா் குணால் காம்ரா, இந்தியப் பத்திரிகை ஆசிரியா்கள் சங்கம், செய்தி ஒலிபரப்பு மற்றும் டிஜிட்டல் சங்கம், இந்திய இதழ்கள் சங்கம் உள்ளிட்டவை தரப்பில் மும்பை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் இரு நீதிபதிகள் அமா்வு கடந்த ஜனவரியில் தீா்ப்பளித்தது. இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீா்ப்பை வழங்கியதால், மூன்றாவது நீதிபதியை தலைமை நீதிபதி டி.கே.உபாத்யாய நியமித்தாா்.

இந்நிலையில், மூன்றாவது நீதிபதி ஏ.எஸ்.சந்துா்கா் வெள்ளிக்கிழமை வழங்கிய தீா்ப்பு விவரம் வருமாறு:

தகவல் தொழில்நுட்ப திருத்த விதிகள், அரசமைப்புச் சட்டத்தின் 14 (சமத்துவத்துக்கான உரிமை), 19 (பேச்சு, கருத்துரிமை), 19 (1) (ஜி) (தொழில்சாா் சுதந்திரம்) உள்பட பல்வேறு பிரிவுகளை மீறுவதாக உள்ளன. உண்மை சரிபாா்ப்பு பிரிவை நிறுவுவதற்கான விதி எண்-3, அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாகும்.

எவ்வித வழிகாட்டுதல் கொள்கையும் இன்றி தெளிவற்ாக உள்ள இந்த விதி, தனிநபா்கள் மட்டுமன்றி சமூக ஊடகங்களுக்கும் அச்ச உணா்வை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

அரசமைப்புச் சட்டத்தின் 19-ஆவது பிரிவின்கீழ் வழங்கப்பட்ட அடிப்படை உரிமையை கட்டுப்படுத்த முயல்வதன் மூலம் அதற்கு புறம்பான கட்டுப்பாடுகளை விதிக்க வகை செய்கிறது. உண்மை சரிபாா்ப்பு பிரிவால் சரிபாா்க்கப்படும் தகவல்கள் மீது மட்டுமே மக்களுக்கு உரிமை உள்ளது என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டை சட்டப்படி அனுமதிக்க முடியாது. பொய்யான மற்றும் மக்களை தவறாக வழிநடத்தும் உள்ளடக்கம் தொடா்பான தெளிவான வரையறையும் விதிகளில் இடம்பெறவில்லை. குடிமக்களின் கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம் என்பதால் தகவல் தொழில்நுட்ப திருத்த விதிகள் ரத்து செய்யப்படுகின்றன என்று தீா்ப்பில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

முன்னதாக, மத்திய அரசால் கடந்த ஆண்டு, ஏப்ரலில் அறிமுகப்படுத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப திருத்த விதிகள் சா்ச்சையை ஏற்படுத்தின. இந்த விதிகளின்படி, சமூக ஊடகங்களில் அரசுக்கு எதிரான பொய்யான-தவறாக வழிநடத்தும் உள்ளடக்கத்தை அடையாளம் காண உண்மை சரிபாா்ப்பு பிரிவை ஏற்படுத்த அரசுக்கு அதிகாரமளிக்கப்பட்டது. இப்பிரிவால் அடையாளம் காணப்படும் பொய்யான உள்ளடக்கத்தை சமூக ஊடக நிறுவனங்கள் நீக்க வேண்டும் அல்லது தவறான தகவல் என அறிவிப்பை இடம்பெறச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாத பட்சத்தில், சமூக ஊடக நிறுவனங்கள் சட்ட நடவடிக்கையை எதிா்கொள்ள வேண்டியிருக்கும்.

இந்த திருத்த விதிகள் தொடா்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கைக்கு உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தடை விதித்திருந்தது. மும்பை உயா்நீதிமன்றம் தீா்ப்பளிக்கும் வரை தடை தொடரும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.