தில்லியில் 65 கிலோ பட்டாசுகள் பறிமுதல்: ஒருவர் கைது

தில்லியில் பட்டாசுகளை கடத்தியதாக 21 வயது இளைஞர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

தில்லியில் பட்டாசுகளை கடத்தியதாக 21 வயது இளைஞர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

சனிக்கிழமையன்று, நிஹால் விஹாரில் இரவு ரோந்து பணியிலிருந்த அதிகாரிகள் நிலக்கரி விற்பனை செய்யும் கடைக்கு அருகேலிருந்து சன்டே பஜார் நோக்கி ஒரு கருப்பு நிற ஸ்கார்பியோ கார் செல்வதைக் கவனித்தனர்.

சந்தேகத்திற்குரியதாகக் கண்டறிந்ததும், அவர்கள் அந்த வாகனத்தை நிறுத்தினர்.

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்: பிரதமருக்கு ஜெகன் மோகன் ரெட்டி கடிதம்!

பின்னர் காரின் உள்ளே பின் மற்றும் நடு இருக்கைகளில் நான்கு பிளாஸ்டிக் பைகள் வைக்கப்பட்டிருந்ததைக் கண்டனர். அதை ஆய்வு செய்தபோது, ​​பிளாஸ்டிக் பைகளுக்குள் 65 கிலோ பட்டாசுகள் இருப்பதைக் கண்டறிந்து, அவற்றை பறிமுதல் செய்தனர்.

ஒருவர் பிடிபட்ட நிலையில், வாகனத்தில் பயணித்த மேலும் இருவர் தப்பியோடினர்.

கைது செய்யப்பட்ட ரோஹித், காஜியாபாத்தில் இருந்து பட்டாசுகளை வாங்கியதாக போலீஸாரிடம் கூறினார். குற்றம் சாட்டப்பட்ட மற்ற இருவரைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்று காவல்துறை துணை ஆணயர் ஜிம்மி சிராம் தெரிவித்தார்.

தில்லியில் காற்று மாசு காரணமாக பட்டாசுகள் உற்பத்தி, விற்பனை, சேமிப்பு மற்றும் பயன்பாடு போன்றவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை வருகிற ஜனவரி 1, 2025 வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com