மகாராஷ்டிரத்தில் 30 அடி பள்ளத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்ததில் 4 பேர் பலியானார்கள்.
மாகராஷ்டிர மாநிலம், அமராவதியிலிருந்து தர்ணி நோக்கி 50 பேருடன் தனியார் பேருந்து பரத்வடி தானி வழித்தடத்தில் திங்கட்கிழமை காலை சென்றுகொண்டிருந்தது.
பேருந்து, செமடோஹ் அருகேயுள்ள பாலத்தின் கீழ் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 30 அடி பள்ளத்தில் திடீரென கவிழ்ந்தது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
30 பேர் காயமடைந்தனர். நிகழ்விடத்துக்கு வந்த காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு செமடோவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. எனினும், விபத்து குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.