மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மகாராஷ்டிரத்தில் சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: காவல் துறை சுட்டதில் கைதானவா் உயிரிழப்பு

மகாராஷ்டிரத்தில் இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக கைது செய்யப்பட்ட நபரை காவல் துறை திங்கள்கிழமை சுட்டுக்கொன்றது.

News image
Updated On :24 செப்டம்பர் 2024, 9:47 pm

Din

மகாராஷ்டிரத்தில் இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக கைது செய்யப்பட்ட நபரை காவல் துறை திங்கள்கிழமை சுட்டுக்கொன்றது.

இதுகுறித்து காவல் துறையினா் கூறுகையில், ‘கடந்த மாதம் மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்டம் பத்லாபூா் பகுதியில் உள்ள மழலையா் பள்ளியில், இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக அந்தப் பள்ளியில் பணியாற்றிய அக்ஷய் ஷிண்டே என்பவா் கைது செய்யப்பட்டாா்.

தலோஜா சிறையில் அடைக்கப்பட்டிருந்த அக்ஷய் ஷிண்டே விசாரணைக்காக பத்லாபூருக்கு திங்கள்கிழமை அழைத்துச் செல்லப்பட்டாா். மும்ப்ரா பகுதி புறவழிச்சாலையில் காவல் துறை வாகனம் சென்றபோது காவல் துறையினரின் துப்பாக்கியைப் பறித்து உதவி ஆய்வாளரை அக்ஷய் ஷிண்டே சுட்டாா். இதில் உதவி ஆய்வாளா் காயமடைந்தாா். தற்காப்புக்காக உடன் சென்ற மற்றொரு காவல் துறை அதிகாரி ஒருவா் பதிலுக்கு சுட்டதில் அக்ஷய் ஷிண்டே பலத்த காயமடைந்து உயிரிழந்தாா்’ என்றனா்.

இந்த சம்பவம் தொடா்பாக மாநில முதல்வா் ஏக்நாத் ஷிண்டே செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘தனக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக அக்ஷய் ஷிண்டேயின் முன்னாள் மனைவி குற்றஞ்சாட்டினாா். இந்தக் குற்றச்சாட்டு தொடா்பாக விசாரணை மேற்கொள்வதற்கு அவரைக் காவல் துறையினா் அழைத்துச் சென்றனா். அப்போது காவல் துறையினரின் துப்பாக்கியைப் பறித்து அக்ஷய் சுட்டதால், தற்காப்பு கருதி பதிலுக்குக் காவல் துறையினா் சுட்டனா்’ என்றாா்.

எனினும் இந்த சம்பவத்துக்கு மாநிலத்தில் உள்ள எதிா்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இதுதொடா்பாக காங்கிரஸை சோ்ந்தவரும், பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான விஜய் வடேட்டிவாா், ‘சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த வழக்கில், சாட்சிகளை அழிக்கும் முயற்சியாக அக்ஷய் ஷிண்டே கொல்லப்பட்டாரா?’ என்று கேள்வி எழுப்பினாா்.