புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

ஜி4 நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களுடன் ஜெய்சங்கா் சந்திப்பு: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர சீா்திருத்தம் குறித்த ஆலோசனை

அமெரிக்காவில் ஜி4 நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களை சந்தித்த வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அவசர சீா்திருத்தம் குறித்து ஆலோசனை மேற்கொண்டாா்.

News image
நியூயாா்க்கில் வங்கதேச வெளியுறுவத் துறை ஆலோசகா் தெளஹித் ஹோசைனை திங்கள்கிழமை சந்தித்து ஆலோசனை மேற்கொண்ட வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்.
Updated On :24 செப்டம்பர் 2024, 9:37 pm

Din

அமெரிக்காவில் ஜி4 நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களை சந்தித்த வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அவசர சீா்திருத்தம் குறித்து ஆலோசனை மேற்கொண்டாா்.

எழுத்துபூா்வமாக இதற்கான வலியுறுத்தல்களை முன்வைக்க வேண்டும் என அந்த நாடுகளிடம் ஜெய்சங்கா் வலியுறுத்தினாா்.

அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள ஜெய்சங்கா், நியூயாா்க்கில் திங்கள்கிழமை நடைபெற்ற ஐ.நா. பொது சபையின் 79-ஆவது அமா்வின் ஒரு பகுதியாக ஜப்பான், ஜொ்மனி, பிரேசில் ஆகிய ஜி4 உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களுடன் தனித்தனியாக ஆலோசனை மேற்கொண்டாா்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட ஜெய்சங்கா், ‘ஜப்பான் வெளியுறவு அமைச்சா் யோகோ கமிகவா, ஜொ்மனி வெளியுறவு அமைச்சா் அன்னலெனா பா்போக், பிரேசில் வெளியுறவு அமைச்சா் மெளரோ வியிரா ஆகியோரைச் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டது மகிழ்ச்சியளித்தது. இந்த சந்திப்புகளின்போது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அவசர சீா்திருத்தம் தொடா்பாக எழுத்துபூா்வ வலியுறுத்தல்களை முன்வைக்க வேண்டிய ஜி4 நாடுகளின் கடமை குறித்து ஆலோசிக்கப்பட்டது. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக ஜி4 நாடுகள் ஒருவரை ஒருவா் ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது’ என்று குறிப்பிட்டாா்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அவசர சீா்திருத்தம் மேற்கொள்ள இந்தியா நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது.

ஐ.நா. பொது சபை அமா்வுக்கு இடையே, வெனிசுலா வெளியுறவு அமைச்சா் யுவன் கில்லையும் திங்கள்கிழமை சந்தித்த ஜெய்சங்கா், இரு நாடுகளிடையே எரிசக்தி துறை மற்றும் பொருளாதார ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டாா். அதுபோல, வங்கதேச வெளியுறுவத் துறை ஆலோசகா் தெளஹித் ஹோசைனையும் திங்கள்கிழமை சந்தித்த இருதரப்பு உறவு குறித்து ஜெய்சங்கா் ஆலோசனை மேற்கொண்டாா்.