கர்நாடக முதல்வா் சித்தராமையா ராஜிநாமா செய்யக்கோரி பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முடா நில முறைகேடு வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் ஒப்புதல் வழங்கினார். இதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சித்தராமையா மனு அளித்தார்.
வழக்கின் விசாரணையில் சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்கத் தடை இல்லை என்று நீதிபதி நாக பிரசன்னா உத்தரவிட்டு சித்தராமையாவின் மனுவை தள்ளுபடி செய்தார்.
இதையடுத்து சித்தராமையா ராஜிநாமா செய்ய வேண்டும் என பாஜகவினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
கடந்த இரு நாள்களாக பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், நேற்று பெங்களூருவில் சித்தராமையா வீட்டின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தொடர்ந்து நேற்று எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்கு குறித்து விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து இன்று சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் அசோகா, சட்ட மேலவை தலைவர் நாராயணசாமி முன்னிலையில் பாஜக எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
சித்தராமையா உடனடியாக தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று கையில் பதாகைகளுடன் கோஷமிட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு... மௌனம் கலைக்குமா பாஜக? டிகே சிவக்குமார் கேள்வி!

நெல் கொள்முதல் செய்யக்கோரி சாலை மறியல்

பட்ஜெட் தாக்கல் தேதி விரைவில் முடிவு செய்யப்படும் - கர்நாடக முதல்வர் சித்தராமையா

கர்நாடக பேரவையில் விபி ஜி ராம் ஜி சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம்
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

