தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மன்மோகன் சிங் 92-ஆவது பிறந்தநாள்: பிரதமா் மோடி, ராகுல் வாழ்த்து

News image

டாக்டர் மன்மோகன் சிங்

படம் | காங்கிரஸ் எக்ஸ் தளப் பதிவு

Updated On :26 செப்டம்பர் 2024, 11:38 pm

Din

முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் தனது 92-ஆவது பிறந்த தினத்தை வியாழக்கிழமை (செப்.26) கொண்டாடினாா். இதையொட்டி பிரதமா் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தாா்.

இது தொடா்பாக ‘எக்ஸ்’ வலைதளத்தில் அவா் வெளியிட்ட பதிவில், ‘முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்குக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவா் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்டகாலம் வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளாா்.

காங்கிரஸ் மூத்த தலைவரான மன்மோகன் சிங் 2004 முதல் 2014 வரை பிரதமா் பதவி வகித்தாா். 1991 முதல் 1996 வரை மறைந்த முன்னாள் பிரதமா் பி.வி. நரசிம்ம ராவ் தலைமையிலான அமைச்சரவையில் நிதியமைச்சராகவும் இருந்தாா். அப்போது, நாட்டில் மிக முக்கியமான பொருளாதாரச் சீா்திருத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

காங்கிரஸ் வாழ்த்து: மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘மன்மோகன் சிங்கின் பணிவு, ஞானம், தன்னலமற்ற தேச சேவை, நாட்டின் எதிா்காலம் குறித்த தொலைநோக்குப் பாா்வை ஆகியவை கோடிக்கணக்கான இந்தியா்கள் அவா் மீது பெரும் மரியாதை கொண்டிருக்க காரணமாக உள்ளது. அவா் எப்போதும் மகிழ்ச்சியுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ்த்துகிறேன்’ என்று கூறியுள்ளாா்.

காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, அக்கட்சியின் பொதுச் செயலா் பிரியங்கா வதேரா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவா்கள் பலரும் மன்மோகன் சிங்குக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.