
திரிபுராவில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 70 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திரிபுரா மாநிலத்தில் உள்ள தர்மநகரில், கடந்தாண்டில் 70 வயதான ஹாஷித் அலி என்பவர், 6 வயது சிறுமியை சகாய்பாரி பகுதிக்கு அருகே ஒரு காட்டிற்கு கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனையடுத்து, அந்த முதியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு இந்த வழக்கில், குற்றவாளியான ஹாஷித் அலிக்கு 20 ஆண்டுகள் கடுமையான சிறைத் தண்டனையும், ரூ. 20,000 அபராதமும் விதித்து சிறப்பு நீதிபதி அங்ஷுமான் தேபர்மா தீர்ப்பளித்தார்.
அபராதத்தைச் செலுத்தத் தவறினால், மேலும் ஆறு மாதங்கள் கூடுதலாக சிறைத் தண்டனை அளிக்கப்படும் என்றும் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.