45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

நிஃப்டி 340 புள்ளிகள், சென்செக்ஸ் 1072 புள்ளிகள் வீழ்ச்சி

இந்திய பங்குச் சந்தைகளில் நிஃப்டி 340 புள்ளிகள், சென்செக்ஸ் 1072 புள்ளிகள் வீழ்ச்சி

News image
பங்குச் சந்தைகள்
Updated On :30 செப்டம்பர் 2024, 8:28 am

DIN

பல்வேறு சர்வதேச காரணிகளால், திங்கள்கிழமை காலை வணிகம் தொடங்கிய பிறகு, இந்திய பங்குச் சந்தைகளான நிஃப்டி 340 புள்ளிகளும் சென்செக்ஸ் 1072 புள்ளிகளும் சரிவைக் கண்டன.

இந்த வீழ்ச்சி காரணமாக ஒட்டுமொத்தமாக சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி முதலீட்டாளர்கள் கிட்டத்தட்ட ரூ.3 லட்சம் கோடியை இழந்துள்ளனர் என்கிறது தரபுகள்.

இதற்குக் காரணமாக சொல்லப்படுவது என்னவென்றால்,

சீன அரசும், மத்திய வங்கியின் தூண்டுதலாலும், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் என்று அழைக்கப்படும் எஃப்ஐஐ, தனது முதலீடுகளை, சீன சந்தைகள் நோக்கி செலுத்துகிறார்கள், இதன் விளைவாக கடந்த ஐந்து நாள்களில் ஹாங் செங் வணிகம் 14.3 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதுபோலவே ஷாங்காய் வணிகமும் 18 சதவீதம் அதிகரித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக, உருவாகும் புவிசார் அரசியல் உறுதியற்ற தன்மையும் இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

அமெரிக்க பொருளாதார தரவு விரைவில் வெளியிடப்படவிருப்பது, ஃபெடரல் ரிசர்வ் அதிகாரிகளின் கூட்டம், அமெரிக்க ஊதிய விகித அறிக்கை உள்ளிட்டவையும் பங்குச் சந்தை வீழ்ச்சிக்கான காரணங்களாக அறியப்பட்டுள்ளன.

இன்று காலை வணிகம் தொடங்கியபோது சென்செக்ஸ் 85,208.76 என்ற புள்ளியில் இருந்தது. இது கடந்த வார வணிக நேர இறுதியில் 85,571.85 என்ற நிலையில் முடிந்திருந்தது. இந்த நிலையில், ஒரு சதவீதம் வீழ்ச்சியடைந்து 84,530 என்ற நிலையில் வணிகமானது.

நிஃப்டி 50-ம் 26,178.95 என்ற நிலையில் வார இறுதியில் முடிந்திருந்தது. இன்று காலை வணிகம் தொடங்கிய போது 26,061.30 என்ற அளவுக்கு சரிவை அடைந்தது.

அதேவேளையில், இன்று பகல் 12.30 மணிக்கு சென்செக்ஸ் 952 புள்ளிகள் சரிந்து 84,620 ஆகவும், நிஃப்டி 277 புள்ளிகள் சரிந்து 25,902 புள்ளிகளிலும் வணிகமாகின.

நடுத்தர மற்றும் சிறு பங்குகளும்கூட சிவப்பு நிறத்தில் இருந்ததால், விற்பனையானது பெரிய பங்குகளுக்கு என நின்றுவிடவில்லை. மும்பை பங்குச் சந்தையானது -பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் ஒட்டுமொத்த சந்தை மூலதனம் முந்தைய வணிக அமர்வில் கிட்டத்தட்ட ரூ.478 லட்சம் கோடியிலிருந்து இன்றைய வணிகத்தில் ரூ.475 லட்சம் கோடிக்கு கீழே சரிந்திருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.