இந்தியாவின் சக்தி இசைக்குழுவுக்கு கிராமி விருது

பிரபல இசை விருதுகளில் ஒன்றான 'கிராமி' விருது இந்தியாவைச் சேர்ந்த சக்தி இசைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. 
இந்தியாவின் சக்தி இசைக்குழுவுக்கு கிராமி விருது

பிரபல இசை விருதுகளில் ஒன்றான 'கிராமி' விருது இந்தியாவைச் சேர்ந்த சக்தி இசைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

66-வது 'கிராமி' விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் சிறந்த ஆல்பம் பிரிவில் இந்தியாவின் சக்தி இசைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

ஷக்தி குழுவின் ‘திஸ் மொமென்ட்’ என்கிற ஆல்பத்திற்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

சங்கர் மகாதேவன், இசையமைப்பாளர் செல்வகணேஷ் விநாயக்ராம், கணேஷ் ராஜகோபாலன், உஸ்தாத் ஜாகீர் உசேன் உள்ளிட்டோர் சக்தி இசைக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு ஆர்ஆர்ஆர் படத்தின் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு கிராமி விருது கிடைத்தது.

விருது நிகழ்வில்  பேசிய பாடகர் சங்கர் மகாதேவன், எனது குழு, கடவுள், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் இந்தியாவுக்கு நன்றி. இந்தியாவை நினைத்து நாங்கள் பெருமை கொள்கிறோம் என்று தெரிவித்தார். இசையமைப்பாளர் செல்வகணேஷ் வெண்ணிலா கபடிகுழு, குள்ளநரி கூட்டம் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com