மத்திய அரசுக்கு எதிராக தில்லியில் இன்று கேரள முதல்வர் பினராயி விஜயன் நடத்தும் தர்னா போராட்டத்தில், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலும், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானும் பங்கேற்கவுள்ளனர்.
கேரளத்தின் கடன் வாங்கும் வரம்பு மற்றும் வருவாய் பற்றாக்குறை மானியத்தை குறைத்த மத்திய அரசுக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் கடந்த வாரம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மத்திய அரசு, கேரள மாநில ஆளுநரைக் கண்டித்தும், மாநில உரிமைகள், கூட்டாட்சி கோட்பாட்டை பாதுகாக்கும் வகையிலும் தில்லி ஜந்தர்மந்தரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான கேரள மாநில இடது ஜனநாயக அரசு சாா்பில் முதல்வா் பினராயி விஜயன் தலைமையில் தா்னா போராட்டம் இன்று நடைபெறுகிறது.
இந்த நிலையில், கேரள மாநில அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தர்னாவில் கலந்து கொள்ளவுள்ளனர்.
முன்னதாக, மத்திய அரசை கண்டித்து தில்லியில் கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் மாநில அமைச்சர்கள், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ தேர்தல் வழக்கு: வாக்காளர் பதிலளிக்க உத்தரவு!

மைக்கேல் திரைப்படத்தின் ஓடிடி தேதி! இந்தியாவில் எதில் பார்க்கலாம்?

ஓடிடியில் காணக் கிடைக்கும் மனதை இதமாக்கும் ஃபீல் குட் படங்கள்!

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு
விடியோக்கள்

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பா? அமைச்சர் நிர்மல் குமார் பதில்



