
தலைநகர் தில்லியில் அதிகக் குளிர் நிலவிவருவதையடுத்து, இரவு நேரங்களில் வீடற்றவர்கள் தங்கவைக்க 190 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தில்லி நகர்ப்புற தங்குமிட மேம்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
திங்கள்கிழமை தில்லியில் ல் இந்த மாத்தின் அதிக குளிரான நாளாகப் பதிவானது. குறைந்தபட்ச வெப்பநிலை 5.3 டிகிரி செல்சியஸாக பதிவானது. இது சராசரியை விட குறைவாகும். நைனிடாலின் மலைப்பகுதியைப் போன்று இருந்தாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இரவு நேரங்களில் வீடுகளற்ற ஏழைகளுக்கு 190 சிறப்புக் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 60 கூடாரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த கூடாரங்களில் இரவில் சுமார் 8 ஆயிரம் பேரும், பகலில் சுமார் 4 ஆயிரம் பேரும் தங்கியுள்ளனர்.
நாளொன்றுக்கு 200 முதல் 300 பேர் வரை பல்வேறு இடங்களிலிருந்து மீட்டு கூடாரங்களில் தங்கவைக்கப்படுகின்றனர். முன்னதாக மீட்கப்பட்டவர்களுக்கு தேநீர் மற்றும் பிஸ்கட் வழங்கப்பட்டது. தற்போது ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு வழங்கத் தொடங்கியுள்ளோம்.
மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த மொத்தம் 15 மீட்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாரத்திற்கு இரண்டு முறை மருத்துவக் குழு முகாம்களுக்குச் செல்கின்றனர்.
வீடுகளற்றவர்களுக்கு உதவ பிரத்யேக ஹெல்ப்லைன், மொபைல் ஆப் 24 மணி நேரமும் இயங்கும்படி வசதி செய்துள்ளது.
கட்டுப்பாட்டு அறைக்கான இலவச தொலைபேசி எண்கள் - 14461, 011-23378789 , 011-23370560, +919871013284 (வாஸ்ட் ஆப்) மூலமும் தொடர்பு கொள்ளலாம்.
வீடற்ற மக்களைக் கண்காணித்து அவர்களை மீட்க 'ரெயின் பசேரா' (Rain Basera) என்ற மொபைல் செயலி உள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.