போபால்: ரயில் நிலையத்தில் உள்ள ஐஆர்சிடிசி உணவகத்தில் இருக்கும் உணவை எலி சுவைக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம், இடார்சி ரயில் நிலையத்தில் இந்திய ரயில்வேவின் ஐஆர்சிடிசி உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்தில் இருக்கும் உணவை எலி ஒன்று சுவைக்கும் காணொலி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஐஆர்சிடிசி உணவகத்தில் எலி சுவைக்கும் காட்சியை படம்பிடித்த பயணி ஒருவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு, “இதனால்தான் ரயில் நிலையங்களில் உள்ள ஐஆர்சிடிசி உணவகத்தில் நான் உணவு வாங்குவதில்லை.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் மற்றும் ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தையும் டேக் செய்துள்ளார்.
இதையும் படிக்க | 30 ஆண்டுகள் மௌன விரதத்தை முடிக்கவிருக்கும் பெண்! காரணம் இதுதான்!
இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு அதிருப்தி தெரிவிக்கப்பட்ட நிலையில், “இந்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க போபால் மண்டல ரயில்வே மேலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது” என்று ரயில்வே அமைச்சகம் பதிலளித்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் மகாராஷ்டிரம் மற்றும் கோவா இடையேயான லோக்மான்யா திலக் டபுள் டெக்கர் விரைவு ரயிலின் சமையறையில் எலி சுவைத்த விடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.
ஐஆர்சிடிசி வழங்கும் உணவுகள் குறித்து அடிக்கடி இதுபோன்ற எதிர்மறையான செய்திகள் வெளியாகி வருவது பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லேயா்கேம்பில் முளைப்பாரி ஊா்வலம்
தொடா் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது
பெண்ணை மிரட்டிய வழக்கு: யூடியூபா் கைது

கங்கை நதியில் மாசுபாடு குறைந்து வருகிறது: மத்திய அரசு
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

