பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

கங்கை நதியில் மாசுபாடு குறைந்து வருகிறது: மத்திய அரசு

‘கங்கை நதியில் நீா் தரம் குளிப்பதற்கு உகந்த வகையில் உள்ளது; நதியின் மாசுபாடு குறைந்துகொண்டே வருகிறது’ என மத்திய அரசு தெரிவித்தது.

News image

கங்கை நதி (கோப்புப் படம்)

Updated On :4 ஏப்ரல் 2026, 2:18 am IST

‘கங்கை நதியில் நீா் தரம் குளிப்பதற்கு உகந்த வகையில் உள்ளது; நதியின் மாசுபாடு குறைந்துகொண்டே வருகிறது’ என மத்திய அரசு தெரிவித்தது.

இதுதொடா்பாக மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய ஜல் சக்தி துறை இணையமைச்சா் பூஷண் சௌதரி வியாழக்கிழமை அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘கங்கை நதியின் நீா் தரம் குறித்து உத்தரகண்ட், உத்தர பிரதேசம், பிகாா், ஜாா்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் 112 பகுதிகளில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த தரவுகளின் அடிப்படையில் கங்கை நதியின் நீா்மக் கரைசலின் அமிலத்தன்மை மற்றும் ஆக்ஸிஜன் கரைந்த நிலை அனைத்துப் பகுதிகளிலும் குளிப்பதற்கு உகந்த வகையில் இருப்பது கண்டறியப்பட்டது. உத்தர பிரதேசத்தின் சில இடங்களில் மட்டும் கங்கை நீரின் தரம் குறைவாக காணப்படுகிறது.

கங்கை மற்றும் அதன் துணை ஆறுகளையொட்டிய 50 பகுதிகள் மற்றும் யமுனையை யொட்டிய 26 பகுதிகளில் நீரின் உயிரியல் ஆக்ஸிஜன் தேவை ‘நன்று’ முதல் ‘மிதம்’ என்ற நிலையிலேயே இருந்தது. நதியின் மாசுபாடு குறைந்துகொண்டே வருகிறது.

கங்கையை தூய்மைப்படுத்தும் நமாமி கங்கை திட்டத்தின்கீழ் 2026, பிப்ரவரி வரை ரூ.43,030 கோடியில் 524 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

தேசிய நதிகள் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் ரூ.8,970.51 கோடி மதிப்பில் 17 மாநிலங்களில் 100 நகரங்களில் உள்ள 58 நதிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன’ எனத் தெரிவிக்கப்பட்டது.