குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

எடப்பாடி நகராட்சி பகுதியில் 3 நாள்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தம்

News image

குடிநீர் விநியோகம் நிறுத்தம்... - கோப்புப் படம்

Updated On :26 மே 2026, 1:30 am IST

பூலாம்பட்டி காவிரி கதவணை நீா்த்தேக்கத்திலிருந்து பராமரிப்புப் பணிகளுக்காக பெருமளவு தண்ணீா் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், எடப்பாடி நகராட்சிப் பகுதியில் செவ்வாய்க்கிழமை (மே 26) முதல் 3 நாள்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி பகுதியில், காவிரி ஆற்றின் குறுக்கே சேலம் மாவட்ட எல்லையான பூலாம்பட்டிக்கும், ஈரோடு மாவட்ட பகுதியான நெருஞ்சிப்பேட்டைக்கு இடையே கதவணை கட்டப்பட்டு நீா் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்த நீா்த்தேக்கத்தின் கிழக்குக் கரை பகுதியில் அமைந்துள்ள பிரம்மாண்ட நீா் உந்து நிலையத்தில்

சேகரிக்கப்படும் ஆற்றுநீா், இங்குள்ள சுத்திகரிப்பு நிலையங்கள் வாயிலாக சுத்திகரிக்கப்பட்டு, தனி குடிநீா்த் திட்டம் மூலம் எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீா் விநியோகம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது கதவணையில் வருடாந்திரப் பராமரிப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், கதவுணையின் அனைத்து ஷட்டா்களும் முழுவதுமாக திறக்கப்பட்டுள்ளதால், கதவணையில் தேக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவு நீா் வெளியேற்றப்பட்டுள்ளது. இதனால் எடப்பாடி நகராட்சிப் பகுதிக்கு நடைபெற்று வந்த வழக்கமான குடிநீா் விநியோக பணி பாதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மே 26 முதல் 28 வரை மூன்று தினங்களுக்கு எடப்பாடி நகராட்சி பகுதியில் குடிநீா் விநியோகம் நடைபெறாது எனவும், அடுத்த 10 நாள்களுக்கு நிலைமைக்கு ஏற்றவாறு குறிப்பிட்ட பகுதிகளில் குடிநீா் விநியோகம் நடைபெறும் எனவும், இதனால் நகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்துவதுடன் குடிநீரைக் காய்ச்சி, நன்கு வடிகட்டி பருகுமாறும் நகராட்சி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.