
விரைவில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.
ஹரித்வாரில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய புஷ்கர் சிங் தாமி, “உத்தரகண்ட் மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தவுடன் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம் என்று உறுதிபூண்டுள்ளோம்.
இதையும் படிக்க | இளம்பெண்ணை சித்ரவதை செய்த வழக்கு: எம்.எல்.ஏ. மகன், மருமகள் கைது!
ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான ஐந்து உறுப்பினர்கள் கொண்ட குழு பொது சிவில் சட்டத்திற்கான வரைவை தயார் செய்துள்ளது. இந்தத் தகவல் இன்று எனக்கு தெரியவந்தது.
பொது சிவில் சட்ட வரைவு நமக்கு கிடைத்த உடன், சட்டப்பேரவையைக் கூட்டி மாநிலம் முழுவதும் அதனை அமல்படுத்த உள்ளோம்.” என்று தெரிவித்தார்.
பொது சிவில் சட்ட வரைவினை தயார் செய்வதற்காக ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைப்பதற்கு கடந்த டிச.22ம் தேதி உத்தரகண்ட் மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.