ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

எல்லை தாண்டி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்: இந்தியா பதிலடி!

எல்லை தாண்டிய பாகிஸ்தான் ராணுவத்துக்கு பதிலடி கொடுத்தது பற்றி...

News image
கோப்புப்படம் - ANI
Updated On :2 ஏப்ரல் 2025, 6:25 am

DIN

ஜம்மு - காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் புதன்கிழமை காலை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இதையடுத்து எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு இந்திய ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக இந்திய ராணுவம் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:

”பூஞ்ச் ​​மாவட்டம் கிருஷ்ணா காட்டி பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்ததால் ஏப்ரல் 1ஆம் தேதி இரவு கண்ணிவெடி வெடித்தது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அவர்களுக்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கதுவாவின் பஞ்ச்திர்த்தி பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத் துறை அளித்த தகவலின் அடிப்படையில் மார்ச் 31 முதல் ராணுவ வீரர்களும் ஜம்மு - காஷ்மீர் காவலர்களும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. தொடர்ந்து பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.