
உலகப் புகழ்ùபற்ற மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்கிற்கு பிரிட்டனில் 'ஃபிரெட்டாரிங்டன் சாண்ட் மாஸ்டர்' விருது வழங்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் உள்ள டார்செட் மாவட்டத்தின் வேமத் பகுதியில் "2025, சர்வதேச மணல் சிற்பத் திருவிழா' சனிக்கிழமை தொடங்கியது. இதில் இந்தியாவைச் சேர்ந்ச பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் பங்கேற்று, 10 அடி உயரத்திலான விநாயகர் மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார்.
இந்தத் திருவிழாவில் சுதர்சன் பட்நாயக்கிற்கு "ஃபிரெட் டாரிங்டன் சாண்ட் மாஸ்டர்' விருது வழங்கப்பட்டுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த மூத்த மணல் சிற்பக் கலைஞர் ஃபிரெட் டாரிங்டனின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் வேளையில் சுதர்சன் பட்நாயக் இவ்விருதைப் பெறும் முதல் இந்தியர் என்னும் பெருமையைப் பெற்றுள்ளார்.
இது தொடர்பாக சுதர்சன் பட்நாயக் கூறியதாவது:
"ஃபிரெட் டாரிங்டன் சாண்ட் மாஸ்டர்' விருதைப் பெறும் முதல் இந்தியராக இருப்பதற்காக நான் பெருமிதம் கொள்கிúறன்.
உலக அமைதி என்ற செய்தியுடன் நான் அமைத்த விநாயகர் சிலைக்கு மரியாதை அளிக்கும் வகையில் இவ்விருது எனக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
சுதர்சன் பட்நாயக்கிற்கு இவ்விருதை வேமத் நகர மேயர் ஜோன் ஓரெல் வழங்கினார். விருது வழங்கும் விழாவில் "சாண்ட் வேர்ல்டு' அமைப்பின் இயக்குநர் மார்க் ஆண்டர்சன், அதன் இணை நிறுவனர் டேவிட் ஹிக்ஸ், பிரிட்டனின் கலாசாரத் துறை அமைச்சர் நௌரேம் ஜே.சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள சுதர்சன் பட்நாயக், 65-க்கும் மேற்பட்ட சர்வதேச மணல் சிற்பத் திருவிழாக்களில் பங்கேற்று விருதுகளைப் பெற்றுள்ளார். இந்நிலையில், பிரிட்டனில் "ஃபிரெட் டாரிங்டன் சாண்ட் மாஸ்டர்' விருதைப் பெற்றதற்காக சுதர்சன் பட்நாயக்கிற்கு அவரது சொந்த மாநிலமான ஒடிஸாவின் முதல்வர் மோகன் சரண் மாஜீ வாழ்த்து தெரிவித்துள்ளார்.