துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

ஜிப்லி புகைப்படம் வேண்டுமா? காவல்துறை எச்சரிக்கை

ஜிப்லி புகைப்படம் கண்டிப்பாக வேண்டுமா என்று சிந்திக்க வேண்டும் என காவல்துறை எச்சரிக்கை!

News image

ஜிப்லி புகைப்படம். - படம் | அஸ்ஸாம் காவல்துறை எக்ஸ்

Updated On :9 ஏப்ரல் 2025, 4:13 pm IST

அண்மை நாள்களாக, ஜிப்லி செய்யறிவு கலை மூலம் தங்களது புகைப்படங்களை மாற்றி அந்த ஜிப்லி புகைப்படங்களை பலரும் பகிர்ந்து வருகிறார்கள். ஆனால், நிச்சயமாக ஜிப்லி புகைப்படங்கள் வேண்டுமா என்று சிந்திக்குமாறும், தேவையில்லாமல் மோசடிகளில் சிக்க வேண்டாம் என்றும் தமிழக காவல்துறையின் சைபர் குற்றப் பிரிவு எச்சரித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் எச்சரிக்கைப் பதிவில்,

ஒரு பயனாளர், தான் எடுத்த செல்ஃபி அல்லது புகைப்படம், குழுப் புகைப்படங்களை செய்யறிவு தொழில்நுட்பத்தில் பதிவிட்டு, அதிலிருந்து ஜிப்லி புகைப்படங்களை பெறுகிறார். ஆனால், ஜிப்லி புகைப்படத்தைச் சுற்றி இருக்கும் அச்சுறுத்தல்களை பயனாளர்கள் மறந்துவிடுகிறார்கள்.

ஒரு பயனாளர், செய்யறிவு தொழில்நுட்பத்தில், தனது புகைப்படத்தைப் பதிவு செய்யும்போது, அது முகங்கள், உணர்வுகள், வெளிப்புறங்கள் என அனைத்தையும் பதிவு செய்துகொள்கிறது. இதனைக் கொண்டு பயனாளரின் ஒப்புதல் இல்லாமலே, செய்யறிவுக்கு உணர்வுகள், முகப்பாவம் குறித்து பயிற்சி அளிக்கப்படலாம்.

மேலும், ஒரு புகைப்படத்தைக் கொடுத்துவிட்டால், அதனை டெலீட் செய்யும் வாய்ப்பும் இல்லை.

மக்கள் எடுக்கும் ஜிப்லி புகைப்படங்கள், பல்வேறு சமூக வலைதளங்களிலும் பரவுகிறது. அதிகாரப்பூர்வமற்ற இணையதளங்களிலும் புழங்குகிறது. இதன் மூலம், ஒருவர் சைபர் குற்றவாளிகளுக்கு இரையாகலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

சில இணையதளங்களில் ஜிப்லி தொழில்நுட்பத்தை இலவசமாக டவுன்லோடு செய்துகொள்ளும் வாய்ப்பும் கிடைக்கிறது. இதில் பதிவேற்றும் புகைப்படங்கள் டீப் ஃபேக் புகைப்படங்களாக மாற்றப்பட்டால் என்னவாகும்?

அது மட்டுமல்லாமல், ஜிப்லி தொழில்நுட்பம் என்று வரும் மோசடியாளர்களின் லிங்குகளை கிளிக் செய்து ஏமாறும் அபாயமும் இருப்பதால், கண்டிப்பாக ஜிப்லி புகைப்படம் வேண்டுமா என்பதை உறுதி செய்துகொள்ளுமாறும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.